பெர்த்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஷாகின் ஷா அப்ரிடியின் பந்து வீச்சு எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. ஷாகின் ஷா அப்ரிடி 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசக் கூடியவர். ஆனால், பெர்த்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அவரின் சராசரி வேகம் 130 கிலோ மீட்டர் மற்றும் அதற்குக் கீழும் இருந்ததது. அந்த டெஸ்ட் போட்டியில் இரு விக்கெட்டுகளை மட்டுமே அவர் வீழ்த்தினார்.
இது குறித்துப் பேசியுள்ள வக்கார் யூனிஸ், "வேகத்தோடு பந்தை ஸ்விங் செய்யும் திறன் கொண்டவர் ஷாகின் ஷா அப்ரிடி. ஆனால் பெர்த் டெஸ்டில் ஸ்விங் செய்ய முடிந்த அளவிற்கு அவரால் பந்தை வேகமாக வீச இயலவில்லை. பந்து வீச்சில் உள்ள பிரச்னைகளை கண்டறிந்து விரைந்து சரி செய்தால் மட்டுமே அவரால் வேகமாக பந்து வீச இயலும்" என்றார்.