“என்னாலேயே நம்பமுடியல!”- பெரும் விபத்திலிருந்து தப்பிய முன்னாள் இந்திய பவுலர் பிரவீன் குமார்!

மீரட் அருகே முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார் மற்றும் அவருடைய மகன் இருவரும் சென்ற கார் விபத்துக்குள்ளானது.
Praveen Kumar
Praveen KumarTwitter
Published on

புதிய பந்தை இருபுறமும் ஸ்விங் செய்வதில் வல்லவரான முன்னாள் வலது கை வேகப்பந்து வீச்சாளரான பிரவீன் குமார், இந்தியாவுக்காக 6 டெஸ்ட், 68 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி, 112 விக்கெட்டுகளை கைப்பற்றியவர்.

2007-2008 காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த சிபி தொடரை இந்தியா வென்றதில் முக்கிய பங்கு வகித்தார் இவர். 2020ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அவர், ரியல் எஸ்டேட் வியாபாரம் மற்றும் உணவகம் நடத்தி வருகிறார். இவர் பயணித்த கார், மீரட் பகுதியில் நேற்று விபத்தில் சிக்கியிருந்தது பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

Praveen Kumar
Praveen KumarTwitter

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நேற்று இரவு நடந்த அந்த பெரும் விபத்தில் பிரவீன் குமாருடன் அவருடைய மகனும் இருந்துள்ளார். பிரவீன் குமார் சென்ற லேண்ட் ரோவர் டிஃபென்டர் கார், பாண்டவ நகர் பகுதியில் இருந்து திரும்பியபோது வேகமாக வந்த டிரக் அதனுடன் மோதியுள்ளது. இந்த பயங்கர விபத்தில் பெரிய காயங்கள் இன்றி தந்தை மற்றும் மகன் இருவரும் நூலிழையில் உயிர்தப்பினர்.

“நான் உங்கள் முன் பேசுவதையே என்னால் நம்பமுடியவில்லை!”

விபத்தில் சிக்கி உயிர் பிழைத்திருக்கும் பிரவீன் குமார் பிடிஐ ஊடகத்துக்கு பேசுகையில், “இந்த விபத்து இன்னும் மோசமாக இருந்திருக்கும். நான் உங்களிடம் பேசுகிறேன் என்பதையே என்னால் நம்பமுடியவில்லை. கடவுளின் அருளால் மட்டுமே நாங்கள் தற்போது நன்றாக இருக்கிறோம். நான் என் மகனை இறக்கிவிட சென்றிருந்தேன். இரவு சுமார் 9:30 மணியளவில் என் காரை பின்னால் ஒரு வாகனம் வேகமாக மோதியது. நாங்கள் சென்றது பெரிய கார் என்பதால் காயங்கள் ஏற்படாமல் போனது. இல்லையெனில் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம்” என்றுள்ளார்.

மேலும் “பம்பர் முழுவதுமாக உடைந்திருக்கும் என்றே நினைத்தேன். ஆனால் காரே மிக மோசமாக சேதமடைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com