இங்கிலாந்து v/s இந்தியா கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு! முழுவிபரம்

இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு. இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
india womens team
india womens teamtwitter
Published on

இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய பெண்கள் அணியை நேற்று அறிவித்திருக்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்த அணிகளில் பல இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, பந்துவீச்சில் பல மாற்றங்கள் நடந்திருக்கிறது.

IND vs ENG
IND vs ENGpt desk

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த டி20 போட்டிகள் டிசம்பர் 6, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கின்றன. டெஸ்ட் போட்டி DY பாடில் மைதானத்தில் டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்குகிறது. இது 4 நாள்கள் கொண்ட போட்டியாக இருக்கும்.

india womens team
ரின்கு பேட்டிங்கை பார்க்கவே இந்தியா மேட்ச் பார்க்கிறேன்.. எனக்கு அவர் நம்பிக்கை தருகிறார்! - ரஸ்ஸல்

இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. டி20 அணியில் பல இளம் வீராங்கனைகள் இடம்பெற்றிருக்கிறார்கள். அமஞ்ஜோத் கௌர், ஷ்ரேயங்கா பாடில், மன்னத் கஷ்யப், சைகா இஷாக், திதாஸ் சாது, கனிகா அஹ§ஜா, மின்னு மணி என சர்வதேச அனுபவம் அதிகம் இல்லாத பௌலர்கள் பலரும் இடம்பெற்றிருக்கிறார்கள். பூஜா வஸ்த்ரகார், ரேனுகா தாக்கூர் ஆகியோர் மட்டுமே அணியில் இடம்பெற்றிருக்கும் அனுபவ பௌலர்கள். ராத யாதவ், ராஜேஷ்வரி கெயக்வாட் போன்ற முன்னணி ஸ்பின்னர்களுக்குக் கூட அணியில் இடம் கிடைக்கவில்லை.

IND vs ENG
IND vs ENGpt desk

வுமன்ஸ் பிரீமியர் லீக் தொடரில் அசத்திய சைகா இஷாக், ஷ்ரேயங்கா பாடில் ஆகியோர் இந்திய அணியின் புதிய சுழல் கூட்டணியை அமைக்கவுள்ளனர். இவர்கள் இருவருமே இந்திய டி20 அணியில் இப்போதுதான் இடம் பிடித்திருக்கிறார்கள். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒருசிலர் ஏற்கெனவே இந்திய அணிக்காக விளையாடியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தற்போது இங்கிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரிலும் சிலர் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அதில் இந்திய ஏ அணியை மின்னு மணி தான் வழிநடத்துகிறார்.

இங்கிலாந்து T-20 தொடருக்கான இந்திய அணி:

ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா (துணைக் கேப்டன்), ஷஃபாலி வெர்மா, ஜெமிமா ராட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, யஸ்திகா பாடியா (விக்கெட் கீப்பர்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), அமஞ்ஜோத் கௌர், ஷ்ரேயங்கா பாடில், மன்னத் கஷ்யப், சைகா இஷாக், ரேனுகா தாக்கூர், திதாஸ் சாது, பூஜா வஸ்த்ரகார், கனிகா அஹுஜா(Kanika Ahuja), மின்னு மணி

ENG vs IND
ENG vs INDpt desk

டெஸ்ட் அணியைப் பொறுத்தவரை கர்நாடக வீராங்கனை சுபா சதீஷ் முதல் முறையாக இந்திய அணியில் இடம்பெற்றிருக்கிறார். ஸ்நே ராணா, ராஜேஷ்வரி கெயக்வாட், மேக்னா சிங் போன்ற அனுபவம் கொண்ட வீராங்கனைகளை இந்த ஃபார்மட்டுக்கு இந்திய அணி தேர்வு செய்திருக்கிறது. ஆச்சர்யமளிக்கும் முடிவாக இந்திய அணியின் சிறந்த விக்கெட் கீப்பரான தானியா பாடியாவுக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. டி20 தொடரைப் போலவே யஸ்திகா பாடியா, ரிச்சா கோஷ் இருவரும் தான் கீப்பர்களாக இடம்பெற்றிருக்கிறார்கள். கீப்பிங்கை விட பேட்டிங்குக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது போல் தெரிகிறது.

india womens team
அதிரடியில் மிரட்டிய ரின்கு சிங்! அக்சர் சுழலில் சுருண்ட ஆஸ்திரேலியா! டி20 தொடரை வென்றது இந்தியா!

இங்கிலாந்து டூ ஆஸ்திரேலியா அணிகளுக்கெதிராக மோதும் இந்திய டெஸ்ட் அணி:

ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா (துணைக் கேப்டன்), ஷஃபாலி வெர்மா, ஜெமிமா ராட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, யஸ்திகா பாடியா (விக்கெட் கீப்பர்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஸ்நே ராணா, சுபா சதீஷ், ஹர்லீன் தியோல், சைகா இஷாக், ரேனுகா தாக்கூர், திதாஸ் சாது, மேக்னா சிங், ராஜேஷ்வரி கெயக்வாட், பூஜா வஸ்த்ரகார்.

IND vs AUS
IND vs AUSpt desk

இந்தத் தொடர் முடிந்த பிறகு ஆஸ்திரேலிய பெண்கள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்கிறது. அதில் 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 1 டெஸ்ட் போட்டி விளையாடப்படும். நேற்று அறிவிக்கப்பட்ட டெஸ்ட் அணி தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் விளையாடும் என்று அறிவித்திருக்கிறது பிசிசிஐ. ஆஸ்திரேலியாவை எதிர்த்து ஆடும் டி20 மற்றும் ஒருநாள் அணிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்து T-20 அணி:

ஹெதர் நைட் (கேப்டன்), மாயா பூசியேர், ஏமி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர்), பெஸ் ஹீத் (விக்கெட் கீப்பர்), டேனி வயாட், அலீஸ் கேப்ஸி, நேட் ஷிவர்-பிரன்ட், சார்லி டீன், மஹிகா கௌர், சோஃபியா டங்க்லி, சாரா கிளென், டேனியல் கிப்சன், லாரன் பெல், சோஃபி எகில்ஸ்டன், ஃப்ரேயா கெம்ப்.

IND vs ENG
IND vs ENG

இங்கிலாந்து டெஸ்ட் அணி:

ஹெதர் நைட் (கேப்டன்), டேமி பூமான்ட், ஏமி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர்), பெஸ் ஹீத் (விக்கெட் கீப்பர்), டேனி வயாட், அலீஸ் கேப்ஸி, நேட் ஷிவர்-பிரன்ட், சார்லி டீன், சோஃபியா டங்க்லி, எம்மா லேம்ப், லாரன் பெல், சோஃபி எகில்ஸ்டன், கேட் கிராஸ், லாரன் ஃபைலர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com