சச்சின்கூட லிஸ்ட்ல இல்லை! 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறை; ஆலி போப் படைத்த புதிய சாதனை!

இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆலி போப் சதம் அடித்ததன் மூலம் 147 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஆலி போப்
ஆலி போப்எக்ஸ் தளம்
Published on

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி, அந்நாட்டுடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றிபெற்று 2-0 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை ஏற்கெனவே கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று (செப்.6) தொடங்கியது.

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் ஜெயித்த இலங்கை அணி, இங்கிலாந்தை பேட் செய்ய பணித்தது. இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 325 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் ஆலி போப், அதிகபட்சமாக 156 பந்துகளில் 154 ரன்கள் எடுத்தார். அதில் 19 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடக்கம். அந்த அணி, அதிக ரன்களைக் குவிக்க ஆலி போப்பே முக்கியப் பங்கு வகித்தார்.

இதையும் படிக்க: தர்ஷனுக்கு டிவி வழங்கிய சிறைத்துறை.. குற்றப்பத்திரிகையில் வெளியான புதிய தகவல்!

ஆலி போப்
3 நாள் வரை இந்தியா கையிலிருந்த ஆட்டம்! ஒரே நாளில் திருப்பிய போப்-ஹார்ட்லி! 28 ரன்னில் ENG வெற்றி!

முன்னதாக, இந்தப் போட்டியில் ஆலி போப் சதம் அடித்ததன்மூலம் 147 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது ஆலி போப் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 7 சதங்கள் அடித்துள்ளார். இதில் ஆச்சர்யமளிக்கும் விஷயம் என்னவென்றால் இந்த ஏழு சதங்களும் வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அடித்தவை ஆகும். இதன்மூலம், தனது டெஸ்ட் போட்டியில் முதல் ஏழு சதங்களையும் வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக விளங்கும் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்கூட இத்தகைய சாதனையை நிகழ்த்தவில்லை.

ஆலி போப் அடித்த டெஸ்ட் சதங்கள்

முதல் சதம் - 135 ரன் - தென்னாப்பிரிக்கா, 2020.

2வது சதம் - 145 ரன் - நியூசிலாந்து, 2022.

3வது சதம் - 108 ரன் - பாகிஸ்தான், 2022

4வது சதம் - 205 ரன் - அயர்லாந்து, 2023.

5வது சதம் - 196 ரன் - இந்தியா, 2024.

6வது சதம் - 121 ரன் - வெஸ்ட் இண்டீஸ், 2024.

7வது சதம் - 103 ரன் - இலங்கை, 2024.

இதையும் படிக்க: கட்சியில் இணைந்த வினேஷ் போகத்| “எனக்கு எதிரான போராட்டம் காங்கிரஸின் சதி” - பிரிஜ் பூஷண் சரண் சிங்

ஆலி போப்
IND vs ENG: 500டெஸ்ட் விக்கெட்டை நெருங்கும் அஸ்வின்! 148* ரன்கள் அடித்து ENG-க்கு உயிர்கொடுத்த போப்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com