சிஎஸ்கே படையில் மீண்டும் தோனி.. தக்கவைக்கப்பட்ட மற்ற வீரர்கள் யார்? எவ்வளவு தொகை?

ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி தொடர்வதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தோனி
தோனிX
Published on

இந்தியாவில் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாகப் பார்க்கப்படுவது, ஐபிஎல் தொடர். கிட்டத்தட்ட 2 மாதங்கள் நடத்தப்படும் இந்தத் தொடரின் அடுத்த சீசன் (18ஆவது சீசன்) 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. எனினும், இதுகுறித்த பேச்சுகள் இப்போதே சூடுபிடித்துள்ளன. அதற்குக் காரணம், விரைவில் ஐபிஎல் அணிக்கான மெகா ஏலம் நடைபெற இருக்கிறது.

பண்ட் - ராகுல் - தோனி - ரோகித்
பண்ட் - ராகுல் - தோனி - ரோகித் PT

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐபிஎல் தக்கவைப்பு விதிமுறைகள், ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

2025 ஐபிஎல் ஏலத்திற்கான தக்கவைப்பு விதிமுறைகளின் படி ஒரு அணி 6 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம், 6 வீரர்களுக்கான RTM-ம் (ஏலத்தின் போது) பயன்படுத்திக்கொள்ளலாம் மற்றும் இந்த ஏலத்தில் அணிகளின் பயன்பாட்டு தொகை 120 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்பிப்பதற்கு இன்று மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஒவ்வொரு அணியும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்பித்துள்ளது.

தோனி
தோனி

இந்நிலையில்தான், தோனி 4 கோடி ரூபாய்க்கு அன்கேப்ட் வீரராக சென்னை அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார். சென்னை அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் 18 கோடிக்கும், ஜடேஜா 18 கோடிக்கும், மதீஷா பதிரானா 13 கோடிக்கும், துபே 12 கோடி ரூபாய்க்கும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com