”நானும் கோலியும் களத்தில் ஒன்றாக ஆடுவது எப்போதும் மகிழ்ச்சியானது”-கோலி உடனான பிணைப்பு குறித்து தோனி!

தோனி மற்றும் விராட் கோலி என்னும் இரண்டு ஆளுமைகளை ஒன்றாக ஒரே களத்தில் பார்ப்பது எந்தளவு ரசிகர்களுக்கு பிடித்தமான விசயமாக இருக்குமோ, அதேஅளவுக்கு தோனிக்கும் பிடித்தமான விசயமாகவே இருந்திருக்கிறது. கோலி உடனான உறவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் தோனி.
தோனி - கோலி
தோனி - கோலிடிவிட்டர்
Published on

ஒவ்வொருமுறை தோனி மற்றும் விராட் காம்போ இணைந்து களம் காணும்போதும், ‘அழிவின் சகோதரர்கள்’ ‘மஹிராட்’ (MAHI-viRAT), ‘ரன்மெஷின் VS பினிசர்’ (கோலி மற்றும் தோனி) என்றெல்லாம் கூறி ரசிகர்கள் அதிகப்படியாக தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அந்த இரண்டு ஆளுமைகளையும் களத்தில் ஒன்றாக பார்ப்பது என்பது எப்போதும் ஸ்பெஷலாகவே இருந்துள்ளது.

ஏனெனில், கோலி மீது தோனியும், தோனி மீது கோலியும் வைத்திருக்கும் நம்பிக்கையின் அளவென்பது அந்தளவுக்கு பெரியதாகவே இருந்துள்ளது. இருவருமே, ஒருவரை ஒருவர் புரிந்துவைத்துள்ள விதமும் அவ்வளவு அழகாகவும் ஆழமானதாகவும் இருக்கும். இதை நிரூபிக்கும்விதமாக பல மைதானங்களில், பல மேடைகளில் கோலி மற்றும் தோனி தங்கள் இணக்கத்தை வெளிப்படையாகவே காட்டியுள்ளனர்.

தோனி - கோலி
தோனி - கோலிடிவிட்டர்

உதாரணத்துக்கு தோனியிடமிருந்து விராட் கோலிக்கு கேப்டன்சி கைமாறிய போது, ”உலக கிரிக்கெட்டில் என் தலைமையில் இந்தியா கண்ட முன்னேற்றத்தை விட, கோலியின் தலைமையில் நல்ல முன்னேற்றமடையும்” என்று கூறினார் தோனி. அதேபோல விராட் கோலி பேசும்போது, ”எனக்கு எப்போதும் என்னுடைய கேப்டன் என்றால் அதுதோனி தான், அவர் எந்தமுடிவெடுத்தாலும் நான் கண்ணை மூடிக்கொண்டு அவர் பின்னால் சென்றுவிடுவேன். ஏனென்றால் அவரின் முடிவு எப்போதும் சரியானதாக இருக்கும்” என்று கூறினார்.

அனைத்தையும் மீறி மைதானத்திலேயே தோனியின் வெறித்தனமான ரசிகராக கோலி மாறிய பல தருணங்களை சொல்லலாம், அதேபோல விராட் கோலியின் பேட்டிங்கிற்கு தோனியும் பெரிய ரசிகராக இருந்த தருணங்கள் நிறைய இருக்கின்றன.

இந்நிலையில் கோலி உடனான உறவு எப்படி என்பது குறித்து பேசியிருக்கும் மகேந்திர சிங் தோனி மனம் திறந்து பேசியுள்ளார்.

தோனி - கோலி
பெண் வீராங்கனையுடன் மோதியது ஆணா? 46 நொடிகளில் முடிந்த போட்டி.. பாரீஸ் ஒலிம்பிக்கில் எழுந்த சர்ச்சை!

”எங்கள் உறவு இப்படி பட்டதுதான்..”

ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனி ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது விராட் கோலி உடனான உறவு குறித்து ஒரு ரசிகர் தோனியிடம் கேள்வி எழுப்பினார்.

கோலி குறித்து மனம் திறந்து பேசிய தோனி, “நாங்கள் இருவரும் நீண்ட காலமாக இந்தியாவுக்காக விளையாடிய சகவீரர்களாக இருக்கிறோம். உலக கிரிக்கெட் என எடுத்துக்கொண்டால் கோலி சிறந்தவர்களில் ஒருவராக இருக்கிறார், மிடில் ஓவர்களில் அவருடன் என்னால் நிறைய பேட்டிங் செய்ய முடிந்தது மகிழ்ச்சியானது. நாங்கள் களத்தில் ஒன்றாக விளையாடும்போது இரண்டு மற்றும் மூன்று ரன்களை ஓடிஎடுப்பது வேடிக்கையாக இருக்கும்.

நாங்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்வது இல்லை என்றாலும், எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எங்கள் உறவில் உறுதியாக இருக்கிறோம். எப்போது சந்தித்தாலும் சிறிதுநேரம் சென்று என்ன நடக்கிறது என்பது குறித்து பேசுவோம், அதுதான் எங்கள் உறவு" என்று விராட்கோலி உடனான உறவு குறித்து தோனி பேசினார்.

தோனி - கோலி
IND vs SL: இறுதிவரை விட்டுக்கொடுக்காத இலங்கை அணி.. சமனில் முடிந்த போட்டி! ஏன் சூப்பர் ஓவர் இல்லை?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com