"Once a Lion, Always a Lion" - வரலாற்றின் பக்கங்களில் தோனியின் கேப்டன்சி சகாப்தம் தொடங்கிய நாள்!

கேப்டன் கூல், தல இதைத்தாண்டி, தனிமனித வழிபாட்டுக்கு என்னென்ன வார்த்தைகள் இருக்கின்றதோ, அத்தனையையும் குறிப்பிட்டு தோனியை வழிபடும் ரசிகர்களும் உண்டு..
தோனி
தோனிpt web
Published on

அனைத்தையும் தனதாக்கும் தோனி

தமிழ்நாட்டில், தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கான மாஸ் பாடல்கள் எப்போது வெளியானாலும், ஹீரோயிச ட்ரைலர்கள் எப்போது வெளியானாலும் அதை ஓரிரு தினங்களில் தனதாக்கிக் கொள்வார் கேப்டன் தோனி. பிகில் படத்தில் ஒரு காட்சி வரும்.. போலீஸ்காரரிடம் பேசும் விஜய், “ஓப்பனிங்ள ஏதோ செம்ம மேட்டர் சொன்னியே என்ன அது? ஹான்.. நாம யாருன்னு முக்கியம் இல்ல. நம்மளால என்ன முடியும்ன்றதுதான் முக்கியம்.. நமக்கு செட் ஆகுதுல்ல இந்த டயலாக்கு.. நான் வச்சிக்கிறேன்” என கூறி மாஸாக நடந்து செல்வார்.. அப்படித்தான் தோனிக்கும் எல்லாம் செட் ஆகிறது, கொண்டாடித்தீர்க்கின்றனர் ரசிகர்கள்.

கேப்டன் கூல், தல இதைத்தாண்டி, தனிமனித வழிபாட்டுக்கு என்னென்ன வார்த்தைகள் இருக்கின்றதோ, அத்தனையையும் குறிப்பிட்டு தோனியை வழிபடும் ரசிகர்களும் உண்டு.. தனிமனித வழிபாடு சரியோ தவறோ, இந்த விவாதங்களைத் தாண்டி, அதை தனக்கான விஷயங்களுக்குப் பயன்படுத்தாத தோனியும், கொண்டாட்டத்திற்கான விஷயமாக மட்டுமே பார்க்கும் ரசிகர்கள் இருக்கும்வரை, அந்த கொண்டாட்டத்தில் என்ன தவறு இருக்கிறது?

தோனி
தேனி|பிறந்து 52 நாட்களேஆன குழந்தை விற்பனை என வந்த தகவல்.. உடனடியாக களத்தில் இறங்கி மீட்ட அதிகாரிகள்!

2007 செப்டம்பர் 14

இந்த கொண்டாட்டம் தோனி வாங்கிக் கொடுத்த கோப்பைகளாலும், அவர் அடிக்கும் சிக்சர்களால் மட்டுமே கிடைக்கிறதா என்ன? ஏதும் இல்லாத ஒரு இடத்தில் இருந்து வந்து, அத்தனை எளிதாக கிடைக்காத மக்களது மனங்களை வென்றதற்கு இடையிலான பயணங்களால் கிடைத்தது. எத்தனை ஏற்ற இறக்கங்கள், எத்தனை விமர்சனங்கள்.. எப்போதும் முகம் சுழித்திடாத, கோபத்தை பெரும்பாலும் காட்டாத, பதற்றமான சூழலையும் நிதானமாக கையால்கிற, மைதானத்தில் இருக்கும் கடைநிலை ஊழியர்களிடமும் ஒரே மாதிரி நடந்துகொள்கிற பண்புகளால் கிடைத்தது.. முக்கியமாக வழக்கத்திற்கு மாறாக அவுட் ஆஃப் தி பாக்ஸ் சிந்திக்கும் திறனாலும், அதனால் இந்திய அணிக்கு கிடைத்த பலன்களாலும் கிடைத்தது. இவை அனைத்தும் தான், எத்தனை சிறந்த வீரர்கள் வந்தாலும், நம்மை தோனியைத் தேடச் சொல்கிறது மனம்.

எதற்காக இத்தனை இத்தனை விளக்கம் என யோசிக்கிறீர்கள் என்றால், அதற்கான காரணமும் இல்லாமல் இல்லை. எதிரணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கும் அதிரடி பேட்ஸ்மேன், சாமர்த்தியமான விக்கெட் கீப்பர் தோனி, கேப்டன் கூல் ஆவதற்கான அச்சாணியாக அமைந்த நாள்தான் இன்று. ஆம், தோனி முதன்முதலாக, கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தி வெற்றியைத் தேடித்தந்த நாள்.

தோனி
”நானும் கோலியும் களத்தில் ஒன்றாக ஆடுவது எப்போதும் மகிழ்ச்சியானது”-கோலி உடனான பிணைப்பு குறித்து தோனி!

முதல் போட்டியில் வெற்றி

2007 செப்டம்பர் 14. டி20 உலகக்கோப்பையில், இந்திய அணியின் கேப்டனாக எம்.எஸ். தோனி தனது முதல் ஆட்டத்தை ஆடிய நாள். முதல் போட்டியே பாகிஸ்தானுடன். இங்கிருக்கும் அரசியல் சூழலால், பாகிஸ்தானுடன் நடக்கும் கிரிக்கெட் போட்டிக்கு எத்தனை எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இதில், கேப்டனாக பொறுப்பேற்று முதல் போட்டியே பாகிஸ்தானுடன் என்றால், இருக்கும் பதற்றத்திற்கு சொல்லவா வேண்டும்.

அந்த போட்டியில் நடந்தது எல்லோருக்கும் தெரிந்ததுதான். இரு அணிகளும் 20 ஓவர்களுக்கு 141 ரன்களை எடுக்க, ஆட்டம் bowl out முறைக்கு செல்ல, இறுதியில் இந்திய அணி வென்றது. பவுல் அவுட்டில் பந்துவீச 3 வீரர்களை தோனி தேர்வு செய்த விதமே சொல்லும் அவர் பாணி தனிரகம் என்று. அன்று தொடங்கிய அந்த வெற்றி பயணம் தோனிக்கு இன்னும் தொடர்கிறது.

கேப்டனாக, 74 டி20 போட்டிகளில் 41 வெற்றிகள், 200 ஒருநாள் போட்டிகளில் 110 வெற்றிகள், 60 டெஸ்ட் போட்டிகளில் 27 வெற்றிகள் என சிறப்பான ரெக்கார்டையே வைத்துள்ளார்.

தோனி
3 ஆண்டுகால திமுக ஆட்சியில் இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு? கிடைக்கும் வேலைவாய்ப்புகள் என்ன?

தான் யார் ஒருவரையும் விட பெரியவன் அல்ல

தோனி சிறந்த வீரர்களைக் கொண்டு கோப்பைகளை வெல்வதில்லை. இருக்கும் வீரர்களை சிறந்தவர்களாக்கி கோப்பைகளை வெல்கிறார். இது தோனியின் ரசிகர்கள் சொன்னதல்ல.. தலை சிறந்த கிரிக்கெட்டர்கள் சொன்னது.

உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போமே, சிஎஸ்கே அணி முதல் முறையாக கோப்பையை வென்ற அணியில் முக்கிய வீரராக இருந்தவர் மேத்யூ ஹைடன். அவர் ஊடகமொன்றில் பேசுகையில், “தோனியால் ஆஸ்திரேலிய அணியை கூட எளிதாக வழிநடத்த முடியும். ’தான் யார் ஒருவரையும் விட பெரியவன் அல்ல’ என அவர் நம்புகிறார். அவர் தன்னை முன்னிறுத்திக் கொள்வதற்காக அல்லாமல், அணிக்காக கடினமாக உழைக்கிறார். மக்களை ஒன்றிணைக்க ஒரு வழியை கண்டுபிடித்து, அதை சுய விளம்பரமோ அல்லது ஈகோவோ இல்லாத வகையில் மேற்கொள்கிறார்” என தெரிவித்திருந்தார். இன்னும் எத்தனை எத்தனையோ..

இதைத்தாண்டி சுவாரசியமான விஷயம் என்னவென்றால் தோனி இந்தியாவிற்காக 6 கேப்டன்களின் கீழ் விளையாடியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் தோனியின் முதல் கேப்டனாக இருந்தது கங்குலி. ஒருநாள் போட்டிகளில் தோனி அறிமுகப்படுத்தப்பட்டது கங்குலி கேப்டனாக இருந்தபோதுதான். ஆனால், கங்குலியின் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்தது தோனி.

தோனி
டெல்லி-பஞ்சாப்-ஹரியானா |குற்றங்களுக்கான சூத்திரதாரி.. நிழல் உலக தாதா.. யார் இந்த லாரன்ஸ் பிஷ்னோய்?

தோனிக்கு கேப்டனாக செயல்பட்டவர்கள் யார்?

அடுத்ததாக ராகுல் ட்ராவிட் தலைமையின் கீழும் தோனி விளையாடியுள்ளார். ட்ராவிட்டுக்கு மாற்றாக ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது தோனி. ட்ராவிட்டின் கடைசி ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் தோனியே கேப்டனாக செயல்பட்டார்.

அனில் கும்ப்ளே இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த போது தோனி, அவரது தலைமையின் கீழ் விளையாடியுள்ளார். பின்னர் கும்ப்ளேவிற்கு மாற்றாக தோனியே டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கும்ப்ளே நியமனம் செய்யப்பட்ட போது இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்தது தோனி.

இந்திய அணி தனது முதல் டி20 போட்டியை தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 2006 ஆம் ஆண்டு ஆடியது. அப்போது சேவாக் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். அந்த அணியில் தோனியும் இருந்தார். பின்னர் இந்திய அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்ற பின், சேவாக் துணை கேப்டனாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

தோனி
இயக்குநர்கள், உதவி இயக்குநர்களின் வாரிசுகளுக்காக.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் முன்னெடுப்பு!

ONE LAST TIME

பின்னர் விராட் கோலியின் தலைமையின் கீழும், ரோகித் சர்மாவின் தலைமையின் கீழும் விளையாடியுள்ளார். விராட் கோலியின் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி விளையாடியது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரை கணக்கில் கொண்டால், ஜடேஜா மற்றும் ருதுராஜ் தலைமையிலும் குறிப்பிடத்தக்கது.

தோனி ஒரு வீரராக தனது கிரிக்கெட் வாழ்வின் கடைசி கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் அவர் விளையாட வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் விருப்பம். ONE LAST TIME.. நடக்குமா? காத்திருப்போம்.

தோனி
சேவாக்கிற்கு சிம்ம சொப்பனம்.. ரூ.1.3 கோடிக்கு RCB அணிக்காக விளையாட மறுத்த ஆஸி. வீரரின் இன்றைய நிலை?!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com