IPL 2025: உறுதியான தோனி..? தக்கவைக்கப்படும் வீரர்கள் யார் யார்? எமோஜிகளால் சஸ்பென்ஸ் வைத்த CSK!

ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் வைக்கும் விதத்தில், ஐந்து வீரர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல், எமோஜிகளை வெளியிட்டுள்ளது சிஎஸ்கே.
தோனி
தோனிஎக்ஸ் தளம்
Published on

இந்தியாவில் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாகப் பார்க்கப்படுவது, ஐபிஎல் தொடர். கிட்டத்தட்ட் 2 மாதங்கள் நடத்தப்படும் இந்தத் தொடரின் அடுத்த சீசன் (18ஆவது சீசன்) 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. எனினும், இதுகுறித்த பேச்சுகள் இப்போதே சூடுபிடித்துள்ளன. அதற்குக் காரணம், விரைவில் ஐபிஎல் அணிக்கான மெகா ஏலம் நடைபெற இருக்கிறது.

இதையடுத்து, ஏலத்திற்கு முன்பு ஒவ்வோர் அணியும் தாங்கள் தக்க வைக்கும் வீரர்களின் இறுதிப் பட்டையலை நாளைக்குள் (அக்.31) வெளியிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒவ்வோர் அணியும் அதற்கான வேலைகளில் கடந்த சிலநாட்களாக மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில், ஐபிஎல் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும் இதற்கான செயலில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், அவ்வணி நிர்வாகம் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை குறியீடாக சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. அதாவது, ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் வைக்கும் விதத்தில், ஐந்து வீரர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல், எமோஜிகள் மூலம் அந்த வீரர்களின் அடையாளத்தை குறிப்பிடும் வகையில் அதுகுறித்த பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. இதையடுத்து, ரசிகர்கள் பலரும் அந்த எமோஜிக்களை வைத்து அது யாராக இருக்கும் என கணித்துவருகிறார்கள்.

இதையும் படிக்க: ஒடிசா | வலியால் துடித்த கர்ப்பிணி.. விடுமுறை தராத உயரதிகாரி.. அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

தோனி
2025 IPL: CSK-வுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த தோனி..? உற்சாகமாகும் ரசிகர்கள்!

அந்தப் பட்டியலில் வழக்கம்போல் இந்திய அணிக்கு மட்டுமல்லாது, சென்னை அணிக்கும் ஐபிஎல் கோப்பைகளைப் பெற்றுத்தந்த, ரசிகர்களால் ‘தல’ என செல்லமாய் அழைக்கப்படும் தோனி, அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ஹெலிகாப்டர் எமோஜி இடம்பெற்றிருப்பதால், அவர் உறுதியாகி உள்ளார். காரணம், அவர் ஹெலிகாப்டர் சாட் அடிப்பதில் கில்லியாயிற்றே. அதைவைத்தே ரசிகர்கள் தோனியை, டிக் அடித்துள்ளனர். இன்னும் சிலவகை எமோஜிகளை வைத்துப் பார்க்கும்போது பதிரானா, ஜடேஜா, ருதுராஜ் ஆகியோர் உறுதியாகத் தக்கவைக்கப்படலாம் என ரசிகர்கள் உறுதியாய் தெரிவிக்கின்றனர். இறுதியாக அந்தப் பட்டியலில் 5வது வீரராக ரச்சின் ரவீந்திராவோ அல்லது ஷிவம் துபேவோ இடம்பெறலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். என்றாலும், நாளைதான் இதன் முடிவுகள் தெரிய வரக்கூடும்.

தோனி
தோனிட்விட்டர்

சமீபத்தில், தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல்லில் விளையாடுவதாகத் தெரிவித்திருந்தார். அவரது சம்மதத்திற்குப் பிறகே சென்னை அணி அவரை டிக் செய்திருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர். புதிய விதியின்படி, தற்போது தோனி Uncapped வீரராக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படலாம். அவரை 4 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே தக்கவைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. (இந்திய அணியில் கடைசியாக பிளேயிங் லெவனில் விளையாடி 5 ஆண்டுகள் நிறைவடைந்தவர்கள், Uncapped வீரர்களாக விளையாடலாம் என ஐபிஎல்லின் புதிய விதி தெரிவிக்கிறது).

இதையும் படிக்க: பிறந்து 25 நாட்களே ஆன பெண் குழந்தை பெற்றோரால் ரூ.30 ஆயிரத்திற்கு விற்பனை.. அசாமில் அதிர்ச்சி சம்பவம்

தோனி
IPL 2025 மெகா ஏலம்| CSK-ல் இருந்து தோனி வெளியேறும் நிலையா? வில்லனாய் மாறும் புதிய விதிமுறை?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com