சாம்பியன்ஸ் டிராபி | இந்தியா வராவிட்டால் 844 கோடி ரூபாய் இழப்பு.. எச்சரிக்கும் சோயிப் அக்தர்!

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா விளையாடவில்லை என்றால் பாகிஸ்தான் மற்றும் ஐசிசி சுமார் 844 கோடி ரூபாய் இழப்பைச் சந்திக்க நேரிடும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிக் அக்தர் தெரிவித்துள்ளார்
சோயிப் அக்தர்
சோயிப் அக்தர்எக்ஸ் தளம்
Published on

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக எந்தவிதமான இருதரப்பு தொடரிலும் விளையாடாமல் இருந்து வருகின்றன. அரசியல் காரணங்களால் இருதரப்புக்கும் இடையே போட்டி நடத்தப்படாமல் இருந்து வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கடைசியாக 2012-13 இருதரப்பு தொடரில் விளையாடின. அதன்பிறகு இரு நாடுகளும் ஐசிசி தொடர்கள் மற்றும் ஆசியக் கோப்பை தொடரில் மட்டுமே நேருக்கு நேர் மோதி வருகின்றன.

இந்தியா கடைசியாக 2006-ஆம் ஆண்டு பாகிஸ்தானிற்குச் சென்று இருதரப்பு தொடரில் விளையாடியது. இதையடுத்து, கடந்த 2023 ஆசியக் கோப்பை பாகிஸ்தானில் நடத்தப்பட்ட நிலையில், இந்தியா பாகிஸ்தானுக்கு செல்ல மறுப்பு தெரிவித்தது. இந்தியாவின் போட்டிகள் மட்டும் ஹைப்ரிட் முறையில் இலங்கை, யுஏஇ-ல் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரும் பாகிஸ்தானில் நடத்தப்படவிருக்கும் நிலையில், இம்முறையும் பாகிஸ்தானுக்குச் செல்ல இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் வரை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இத்தொடரில் கலந்துகொள்ள இந்திய அணி பாகிஸ்தானிற்குச் செல்லாது என பிசிசிஐ, கடந்த வாரம் உறுதியாக தெரிவித்தது. இந்திய அணியின் போட்டிகளை மட்டும் வேறு இடங்களுக்கு மாற்றி வைக்குமாறு கோரிக்கை வைத்திருந்தது.

சாம்பியன்ஸ் டிராபி
சாம்பியன்ஸ் டிராபிஎக்ஸ் தளம்

இதற்கு பாகிஸ்தான், “இந்திய அணி பாகிஸ்தானுக்கு வராவிட்டால் சாம்பியன்ஸ் டிராபி நடத்துவதை பாகிஸ்தான் கைவிட முடிவு செய்யும் என்றும், இந்தியா மோதும் ஆட்டங்களை மட்டும் துபாயில் நடத்த வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை” என எச்சரித்திருந்தது. இதையடுத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்தியாவின் போட்டிகளை நடத்த ஹைப்ரிட் மாடலை பின்பற்றுமாறு பிசிபியை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) கேட்டுக் கொண்டுள்ளது.

பிசிபி இந்த நிபந்தைனைக்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், போட்டி முழுவதுமாக தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்படும் எனவும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில் இந்தியா, பாகிஸ்தான் வர மறுப்பதற்கு விளக்கம் கேட்டு பாகிஸ்தான் ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் போட்டியை பாகிஸ்தானில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றுவது இல்லை என்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது. இதனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி குறித்து இறுதி முடிவு எடுக்காமல் உள்ளது.

இதையும் படிக்க: 1000 நாட்கள்! பற்றி எரியும் நெருப்பு.. உக்ரைன் - ரஷ்யா போர்.. இதுவரை நடந்தது என்ன? 20 முக்கிய Points

சோயிப் அக்தர்
சாம்பியன்ஸ் டிராபி|”1996 நினைவிருக்கிறதா?” இந்தியா வராததால் கடைசிநேரத்தில் செக் வைக்கும் பாகிஸ்தான்!

மேலும், இந்திய ஆடவர் அணியைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல அரசு அனுமதி மறுத்துள்ளதால் இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணியும் அங்கு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்காது என தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் நவம்பர் 23 முதல் டிசம்பர் 3 வரை பார்வையற்றோர் T20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

சோயிப் அக்தர்
சோயிப் அக்தர்

இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா விளையாடவில்லை என்றால் பாகிஸ்தான் மற்றும் ஐசிசி சுமார் 844 கோடி ரூபாய் இழப்பைச் சந்திக்க நேரிடும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிக் அக்தர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "பாகிஸ்தான், இந்தியாவை தனது மண்ணுக்கு அல்லது பொதுவான இடத்திற்கு வரவழைத்து போட்டியில் விளையாட வைக்க முடியவில்லை என்றால் ஸ்பான்சர்சிப்பின் மூலம் பெறும் வருவாயில் ஐசிசி மற்றும் போட்டியை நடத்தும் பாகிஸ்தான் 100 மில்லியன் டாலர் (844 கோடி ரூபாய்) இழக்க நேரிடும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: எலான் மஸ்க் To சுசி வைல்ஸ்| ட்ரம்பின் அறிவித்த முக்கிய ஆட்சியாளர்கள்..இதுவரை யார் யார்..முழு விவரம்!

சோயிப் அக்தர்
சாம்பியன்ஸ் டிராபி|நிபந்தனையை ஏற்காவிட்டால் தொடர் தென்னாப்ரிக்காவுக்கு மாற்றம்? பாகிஸ்தானுக்கு செக்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com