’400 சர்வதேச விக்கெட்டுகள்..’ சாதனை பவுலர்கள் பட்டியலில் இணைந்த பும்ரா!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 400 சர்வதேச விக்கெட்டுகள் என்ற மைல்கல் சாதனையை எட்டினார் ஜஸ்பிரித் பும்ரா.
பும்ரா
பும்ராcricinfo
Published on

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரவிச்சந்திரன் அஸ்வினின் தரமான சதம் மற்றும் ஜடேஜாவின் 86 ரன்கள் ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸ் முடிவில் 376 ரன்களை குவித்தது.

அஸ்வின்
அஸ்வின்

அதனைத்தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி, இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை தாக்குபிடிக்க முடியாமல் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 5 முறை ஸ்டம்புகளை தகர்த்த இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் மிரட்டிவிட்டனர்.

அபாரமாக பந்துவீசிய பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்த, ஆகாஷ் தீப், ஜடேஜா, முகமது சிராஜ் மூன்றுபேரும் சேர்ந்து தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். வங்கதேச அணியில் அதிகப்பட்சமாக ஷாகிப் அல் ஹசன் 32 ரன்களை பதிவுசெய்தார்.

பும்ரா
’எம்.எஸ்.தோனி ரெக்கார்டு முறியடிப்பு..’ வங்கதேச டெஸ்ட்டில் அஸ்வின் படைத்த 3 இமாலய சாதனைகள்!

400 விக்கெட்டுகள் கிளப்பில் இணைந்த பும்ரா..

தன் கிரிக்கெட் வாழ்க்கையில் பிரைம் ஃபார்மில் இருந்துவரும் ஜஸ்பிரித் பும்ரா, வங்கதேசத்துக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக 159 டெஸ்ட் விக்கெட்டுகள், 149 ஒருநாள் விக்கெட்டுகள் மற்றும் 79 டி20 விக்கெட்டுகள் என 397 விக்கெட்டுகள் என்ற எண்ணிக்கையில் களம்கண்டார்.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 10 இந்திய வீரர் மற்றும் 6வது இந்திய வேகப்பந்துவீச்சாளராக மாறி சாதனை படைத்தார். அவர் இந்த சாதனையை ஹசன் மஹ்மூத்தின் விக்கெட்டை வீழ்த்திய போது எட்டினார்.

பும்ரா
பும்ரா

400 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர்கள்:

1. அனில் கும்ப்ளே (1990 - 2008) - 953 விக்கெட்டுகள்

2. ரவிச்சந்திரன் அஸ்வின்* (2010 - 2024*) - 744 விக்கெட்டுகள்

3. ஹர்பஜன் சிங் (1998 - 2016) - 707 விக்கெட்டுகள்

4. கபில் தேவ் (1978 - 1994) - 687 விக்கெட்டுகள்

5. ஜாகிர் கான் (2000 - 2014) - 597 விக்கெட்டுகள்

பும்ரா க்ளாசிக் யார்க்கர்
பும்ரா க்ளாசிக் யார்க்கர்X

6. ரவீந்திர ஜடேஜா* (2009 - 2024*) - 570 விக்கெட்டுகள்

7. ஜவஹல் ஸ்ரீநாத் (1991 - 2003) - 551 விக்கெட்டுகள்

8. முகமது ஷமி* (2013 - 2024) - 448 விக்கெட்டுகள்

9. இஷாந்த் சம்ரா (2007 - 2021) - 434 விக்கெட்டுகள்

10. ஜஸ்பிரித் பும்ரா* (2016 - 2024*) - 401 விக்கெட்டுகள்

பும்ரா
‘மேல ஏறி வாரோம்..’ வங்கதேச டெஸ்ட் போட்டிகளில் உலக சாதனை படைக்கவிருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com