”இதான் யா மேட்ச்” | 196 இன்னிங்ஸில் 2வது கோல்டன் டக்.. ஸ்மித்-ன் லெகஸியை அசைத்து பார்த்த பும்ரா!

ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த வீரரான ஸ்டீவ் ஸ்மித் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இரண்டாவது முறையாக முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறியுள்ளார்.
பும்ரா - ஸ்மித்
பும்ரா - ஸ்மித்cricinfo
Published on

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது.

உலகின் தலைசிறந்த அணிகளாக விளங்கிவரும் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இரண்டு அணிகள் மோதும் தொடர், இரண்டு அணிகளில் எந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லப்போகிறார்கள் என்ற பெரிய எதிர்ப்பார்ப்புடன் தொடர் இன்று தொடங்கியது.

பார்டர் கவாஸ்கர் தொடர்
பார்டர் கவாஸ்கர் தொடர்

ரோகித் இல்லாததால் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்திய ஜஸ்பிரித் பும்ரா, ஒரு தலைசிறந்த போட்டியை கொண்டிருந்தார். இந்திய அணி முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவை 67 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி திணறடித்துள்ளது.

பும்ரா - ஸ்மித்
ஒரே நாளில் 17 Wickets.. IND-க்கு டஃப் கொடுத்து 67-க்கு 7 விக்கெட்டை இழந்த ஆஸி! சொந்த மண்ணில் சோகம்!

கோல்டன் பால்.. கோல்டன் டக்..

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரிஷப் பண்ட் 37 ரன்கள் மற்றும் நிதிஷ் ரெட்டி 41 ரன்கள் உதவியால் 150 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. சிறப்பாக பந்துவீசிய ஹசல்வுட் 4 விக்கெட்டுகள், கம்மின்ஸ், ஸ்டார்க், மார்ஸ் முதலிய வீரர்கள் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

கோலி
கோலி

இந்தியாவை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணியும் இந்தியாவின் குவாலிட்டியான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய பும்ரா உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவன் ஸ்மித் மற்றும் பேட் கம்மின்ஸ் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். முதல்நாள் முடிவில் ஆஸ்திரேலியா 67 ரன்னுக்கு 7 விக்கெட்டை இழந்துள்ளது.

Smith - Bumrah
Smith - Bumrahcricinfo

முதல்நாள் போட்டியின் ஹைலட்டாக ஸ்டீவ் ஸ்மித் கோல்டன் டக்கில் வெளியேறிய சம்பவம் மாறியது. உலகின் சிறந்த பேட்டர்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித் ரன் அடிக்காமல் வெளியேறுவது அரிதான சம்பவம் என்பதால், இது போட்டியில் மிகவும் முக்கியமான தருணமாக இருந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 196 இன்னிங்ஸ்களில் விளையாடியிருக்கும் ஸ்மித், இதுவரை 11 முறை மட்டுமே டக் அவுட்டாகியுள்ளார். அதிலும் கோல்டன் டக்கில் வெளியேறுவது இதுவே இரண்டாவது முறை. இதற்கு முன்பு 2014-ல் க்கெபர்ஹாவில் நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்க பவுலர் டேல் ஸ்டெய்ன் பந்துவீச்சில் ஸ்மித் கோல்டன் டக்கில் வெளியேறியிருந்தார். இரண்டாவது முறையாக பும்ரா ஸ்மித்தை கோல்டன் டக்கில் வெளியேற்றியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் ஸ்மித் கோல்டன் டக்கில் வெளியேறுவது இதுவே முதல்முறை. இந்த தரமான சம்பவத்திற்காக பும்ரா ஒரு கோல்டன் பந்தை வீசியிருந்தார்.

பும்ரா - ஸ்மித்
ஸ்லெட்ஜிங், வார்த்தை மோதல், மறக்கவே முடியாத ஆட்டங்கள்.. ஆஸி. மண்ணில் ஜொலித்த 10 இந்திய வீரர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com