உலக டெஸ்ட் தரவரிசையில் பும்ரா முதலிடம்! 147 வருட கிரிக்கெட் வரலாற்றில் முதல் வேகப்பந்துவீச்சாளர்!

இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் 15 விக்கெட்டுகளை கைப்பற்றிய பிறகு, உலக டெஸ்ட் தரவரிசையில் பவுலர்களின் பிரிவில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார் ஜஸ்பிரித் பும்ரா.
bumrah
bumrahICC
Published on

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த ஜஸ்பிரித் பும்ரா, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முக்கியமான முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட், ஒல்லி போப், பேர்ஸ்டோ மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகிய 4 பேருடைய முக்கியமான விக்கெட்டையும் வீழ்த்தி இந்தியாவை 106 ரன்கள் வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

ஜோ ரூட்டை ரிவர்ஸ் ஸ்விங்கில் அசத்தலாக வெளியேற்றிய பும்ரா, ஒல்லி போப்பை 100 ஆண்டுகளில் சிறந்த யார்க்கர் பந்தை வீசி க்ளீன் போல்டாக்கி வெளியேற்றினார்.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் பேர்ஸ்டோ, பென் ஃபோக்ஸ் மற்றும் டாம் ஹார்ட்லி மூன்று பேரையும் வெளியேற்றிய பும்ரா, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமன்படுத்தி அசத்தினார். இந்நிலையில்தான் இரண்டு போட்டிகளிலும் இன்ஸ்விங், அவுட்ஸ்விங் என கலக்கி 15 விக்கெட்டுகள் வீழ்த்திய அவருக்கு வெகுமானமாக ஐசிசி தரவரிசையில் முதலிடம் கிடைத்துள்ளது.

bumrah
டி20 உலகக்கோப்பை முடிந்த ஒரு வாரத்தில் ஜிம்பாப்வே செல்லும் இந்தியா!

147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஃபாஸ்ட் பவுலர்!

உலக கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி அறிவித்திருக்கும் நிலையில், டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த ரவிச்சந்திரன் அஸ்வினை பின்னுக்கு தள்ளி முதல்முறையாக நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. இதன்மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

கபில்தேவ்
கபில்தேவ்

இதற்கு முன் பும்ராவின் அதிகப்படியான டெஸ்ட் தரவரிசையாக 3ம் இடத்தையே பிடித்திருந்தார். பும்ராவிற்கு முன்னதாக 1979ம் ஆண்டு கபில்தேவ் மட்டுமே அதிகப்படியாக டெஸ்ட் தரவரிசையில் 2வது இடம்பிடித்த இந்திய வேகப்பந்துவீச்சாளராக இருந்தார். பும்ராவிற்கு முன் சிறந்த வேகப்பந்துவீச்சாளராக இருந்த ஜகீர் கான் கூட அதிகப்படியாக 3வது இடத்தையே பிடித்திருந்தார். இந்நிலையில் 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்கும் முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளராக மாறி சாதனை படைத்துள்ளார் ஜஸ்பிரித் பும்ரா.

zaheer - bumrah
zaheer - bumrah

அதுமட்டுமல்லாமல் ரவிச்சந்திரன், ரவிந்திர ஜடேஜா மற்றும் பிஷன் சிங் பேடி மூன்று இந்திய பவுலர்களுக்கு பிறகு டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடிக்கும் 4வது பந்துவீச்சாளராக பும்ரா மாறியுள்ளார்.

bumrah
"பும்ராவை விட நான் சிறந்தவன்; சொல்லி அடித்த கில்லி" - யு19 WC-ல் பட்டையை கிளப்பிய டாப் 6 வீரர்கள்!

மூன்று வடிவங்களிலும் முதலிடம் பிடித்த ஒரே உலக பந்துவீச்சாளர்!

தற்போது டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்ததை தொடர்ந்து, டெஸ்ட், டி20, ஒருநாள் கிரிக்கெட் என மூன்று வடிவத்திலும் முதலிடம் பிடித்த முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற உலக சாதனையை பும்ரா படைத்து அசத்தியுள்ளார்.

2024ம் ஆண்டு நம்பர் 1 டெஸ்ட் பவுலராக மாறியிருக்கும் நிலையில், முன்னதாக 2022ம் ஆண்டு ஜூலை 17 அன்று ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர் தரவரிசையில் நம்பர் 1 பவுலராக இருந்தார் பும்ரா. அதேபோல 764 புள்ளிகளுடன் டி20 கிரிக்கெட்டிலும் நம்பர் 1 பந்துவீச்சாளராக பும்ரா இருந்துள்ளார்.

இதன்மூலம் உலகளவில் மூன்று வடிவ கிரிக்கெட் வடிவங்களிலும் முதலிடம் பிடித்த ஒரே வேகப்பந்துவீச்சாளர் என்ற இமாலய சாதனையை படைத்துள்ளார் ஜஸ்பிரித் பும்ரா.

bumrah
"100 ஆண்டுகளில் தலைசிறந்த யார்க்கர்"! ரிப்பீட் மோட்ல பாத்துட்டே இருக்கலாம் சார்! இது பும்ரா மேஜிக்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com