ஆகஸ்டு 15.. ஒரே நாளில் ஓய்வை அறிவித்த தல-சின்ன தல.. அதிகம் பேசப்படாத சுவாரசியமான காரணம்!

சிஎஸ்கே அணியின் இரண்டு தூண்களாக கொடிகட்டி பறந்த இரண்டு நண்பர்கள், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒரேநாளில் ஆகஸ்டு 15-ல் ஓய்வை அறிவித்து எல்லோரையும் அதிர்ச்சியில் தள்ளினர். ஆனால் பிறகு வெளிவந்த ஒரு சுவாரசியமான காரணம் எல்லோரையும் ஆச்சரியத்தில் தள்ளியது.
ரெய்னா - தோனி
ரெய்னா - தோனிweb
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிரோபி உலகக்கோப்பை என மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை தன்வசம் வைத்திருக்கும் ஒரேயொரு உலக கிரிக்கெட் வீரர் ஆவார். அவரது தலைமையில்தான் இந்திய அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து தலைசிறந்த அணியாக தலைநிமிர்ந்தது. அதுமட்டுமல்லாமல் ஒரு வீரராக போட்டியை முடித்துவைக்கும் சிறந்த பினிசராக இன்றளவும் போற்றப்படும் ஒரு வீரராக தோனி இருந்து வருகிறார்.

சச்சின் - தோனி
சச்சின் - தோனிweb

கேப்டன் கூல் என அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி, வீரர்களின் திறமைமேல் அதிகப்படியான நம்பிக்கையை வைத்து தொடர்ந்து வாய்ப்பு வழங்கக்கூடிய கேப்டனாக எப்போதும் இருந்துள்ளார். எந்த வீரரிடம் நெருப்பு இருக்கிறதோ அவர்களுக்கான வாய்ப்பு எப்போதும் தோனியின் தலைமையின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

Rohit-Dhoni
Rohit-Dhoni

2011 உலகக்கோப்பையில் இளம்வீரரான கோலிக்கு வாய்ப்பு வழங்கியது, பல்வேறு தோல்விகளின் போதும் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக ஆதரித்தது, மிடில் ஆர்டரில் சுரேஷ் ரெய்னாவை ஒரு ஆல்ரவுண்டராக அதிகப்படியாக பயன்படுத்தியது, அஸ்வினின் திறமையை 3 வடிவ கிரிக்கெட்டிலும் எடுத்துச்சென்றது, ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட அம்பத்தி ராயுடு மற்றும் அஜிங்கியா ரஹானேவுக்கு அதிகப்படியான வாய்ப்பளித்தது என பல்வேறு சாம்பியன் கிரிக்கெட் வீரர்களின் ஆரம்பகால வாழ்க்கைக்கு பின்னால் மகேந்திர சிங் தோனி இருந்துள்ளார். அதில் சுரேஷ் ரெய்னா தோனியின் தலைமையின் கீழ் ஜொலித்த வீரர்களில் முக்கியமானவர். அவர் தோனியின் தலைமையின் கீழ் 2011 உலகக்கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றினார்.

suresh raina
suresh raina

பல மூத்த வீரர்களின் ஃபேர்வெல் டே தோனி தலைமையில் நடைபெறவில்லை என்பதாலோ, 3 ஐசிசி கோப்பைகளை வென்றவரான தோனி ஃபேர்வெல் போட்டியை கூட எதிர்ப்பார்க்காமல் 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி அறிவித்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் அதிர்ச்சியில் தள்ளினார்.

2019 உலகக்கோப்பைக்கு பிறகு ஒரு ஃபேர்வெல் போட்டியுடன் தோனி ஓய்வுபெறுவார் என்ற ஆசையில் இருந்த ரசிகர்களுக்கு அது பேரிடியாக விழுந்தது. தோனி தன் ஓய்வை அறிவித்து 4 ஆண்டுகள் முடிவடைந்தாலும், இன்னும் அந்த சம்பவம் மறையாமல் அப்படியேதான் இருக்கிறது.

ரெய்னா - தோனி
“MS தோனியால் கிரிக்கெட் வாழ்க்கையை இழந்தோம்” குற்றச்சாட்டு வைத்த முன்னாள் வீரர்கள்..10 பேரின் கதை!

ஒரே நாளில் ஓய்வை அறிவித்த தோனி - ரெய்னா..

கோலி எப்போதும் தன்னுடைய கேப்டன் என்றால் அது தோனி மட்டும்தான் என்று பலபேட்டிகளில் கூறியுள்ளார். அப்படி ஒரு விஸ்வாசத்தை கோலி எப்போதும் வெளிப்படுத்தினாலும், அவருக்கு முன்னதாக தோனியை களத்திலும் களத்திற்கு வெளியேயும் கொண்டாடியவர் என்றால் அது சுரேஷ் ரெய்னா.

ரெய்னா - தோனி
ரெய்னா - தோனி

அவர் எப்படிப்பட்ட விஸ்வாசத்தை கொண்டிருந்தார் என்றால் எப்போதும் தன்னுடைய கேப்டன் தோனி என்றது, தல ஃபாரெவர் என்று கூறியது, தனது சுயசரிதையை எழுதி அது தோனியின் கைகளில் சென்று சேர்ந்த பிறகு ’Thala’s touch on my untold story' என்று பதிவிட்டது, தற்போது தனது ஹோட்டலில் தோனி மற்றும் ரெய்னா இருவரின் சிஎஸ்கே ஜெர்சியை போட்டோ பிரேமாக பொருத்தியிருப்பது என பலமுறை தோனியின் மீதான அதிகப்படியான நட்பையும் அன்பையும் சுரேஷ் ரெய்னா வெளிப்படுத்தி வருகிறார்.

அதற்கும் ஒருபடி மேல் சென்று தோனி 2020-ம் ஆண்டு தனது சர்வதேச ஓய்வை இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் வெளியிட்ட, சிறுது நேரத்தில் தன்னுடைய கேப்டனை பின்தொடர்ந்த ரெய்னா தன்னுடைய சர்வதேச ஓய்வையும் அறிவித்து எல்லோரையும் ஆச்சரியத்தில் தள்ளினார்.

ரெய்னா - தோனி
‘அமாவாச நீதான் பேசுறியா’.. திடீரென தோனியை பாராட்டி பேசும் கவுதம் கம்பீர் - சமீபத்திய 5 புகழுரைகள்!

ஒரே நாளில் ஓய்வை அறிவிக்க என்ன காரணம்?

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி, தோனி பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவானது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தன்னுடைய ஓய்வை எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி எளிதாக அறிவித்த தோனி, “நன்றி - முழுவதும் உங்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி. 1929 மணிநேரத்திற்கு முன்பு முதல் தொடங்கிய என்னை ஓய்வு பெற்றவராகக் கருதுங்கள்" என்று எழுதினார்.

ஆனால் தோனியின் ஓய்வு அறிவிப்புக்கு பிறகு நடந்த சுவாரசியம் என்னவென்றால், அதேநாளில் தோனி ஓய்வை அறிவித்த சிலமணிநேரங்களில் சுரேஷ் ரெய்னாவும் ஓய்வை அறிவித்து எல்லோரையும் ஆச்சரியத்தில் தள்ளினார். அந்த அறிவிப்பு மூலம் தோனி மீதான நட்பு மற்றும் விஸ்வாசம் இரண்டையும் ரெய்னா வெளிப்படுத்தினார்.

dhoni - raina
dhoni - raina

அதற்கும் ஒருபடி மேல் சென்று ஒரேநாளில் ஓய்வு என்பதை அறிவித்த அவர் எல்லோரையும் நெகிழ்ச்சியில் தள்ளினார். ஒரேநாளில் ஓய்வுக்கான காரணத்தை பகிர்ந்த ரெய்னா, “நாங்கள் ஏற்கெனவே ஆகஸ்ட் 15அன்று ஓய்வுபெற முடிவு செய்தோம். தோனியின் ஜெர்சி எண் 7, எனது ஜெர்சி எண் 3. இரண்டையும் சேர்த்தால் 73. ஆகஸ்ட் 15, 2020 அன்று, இந்தியா சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் நிறைவடைந்தது. என்னைப் பொறுத்தவரை, நாங்கள் ஓய்வு பெற அதை விட சிறந்த நாள் வேறெதுவும் இருக்க முடியாது" என்று டைனிக் ஜாக்ரானிடம் ரெய்னா கூறினார். அவர் கூறிய இந்த காரணம் தோனி மற்றும் ரெய்னாவிற்கு இடையேயான நட்பிற்கு ஒரு சிறந்த சான்றாக மாறியது.

ரெய்னா - தோனி
ஏமாற்றம்.. வினேஷ் போகத்தின் மேல்முறையீடு தள்ளுபடி.. பதக்கம் கிடைக்க வாய்ப்பில்லை?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com