IPL 2024: 14 மாதங்களுக்கு பிறகு கிரிக்கெட்டுக்கு திரும்பும் பண்ட்! ஷமி-பிரசித் தொடரிலிருந்து விலகல்!

மிகப்பெரிய சாலை விபத்தில் சிக்கி மீண்டுவந்துள்ள ரிஷப் பண்ட் முழு உடற்தகுதியை எட்டிவிட்டதாகவும், 2024 ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்றும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
prasidh - shami - pant
prasidh - shami - pantX
Published on

2024 ஐபிஎல் தொடரானது உண்மையில் ஒரு வித்தியாசமான தொடராகவே ஒவ்வொரு அணி ரசிகர்களுக்கும் அமையவுள்ளது. ஒவ்வொரு அணியும் பல்வேறு மாற்றங்களோடும், கோப்பை வெல்லும் கனவோடும், எதிர்கால திட்டத்தோடும் களமிறங்கவிருக்கின்றன.

ஒருபுறம் மும்பை அணியின் கேப்டனாக இல்லாமல் வெறும் வீரராக மட்டும் விளையாடவிருக்கும் ரோகித் சர்மா, புதிய ரோலில் விளையாடவிருப்பதாக தெரிவித்திருக்கும் எம்எஸ் தோனி, மும்பை கேப்டனாக ஹர்திக் பாண்டியா, புதிய கேப்டனாக சுப்மன் கில், கொல்கத்தா அணிக்கு திரும்பியிருக்கும் கவுதம் கம்பீர், 20 கோடி பிரைஸ் டேக்கில் விளையாடவிருக்கும் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் என்ற சுவாரசியங்களுக்கு இடையில், 14 மாத இடைவெளிக்கு பிறகு கிரிக்கெட் விளையாடவிருக்கும் ரிஷப் பண்ட் என களைகட்டவிருக்கிறது 2024 ஐபிஎல் தொடர்.

rohit - hardik
rohit - hardik

ரிஷப் பண்ட் விளையாடுவாரா மாட்டாரா? ஒருவேளை விளையாடினால் கேப்டனாகவும், வீரராகவும் மட்டும் விளையாடுவாரா? விக்கெட் கீப்பிங் செய்யமாட்டாரா? என்ற பல கேள்விகள் ரசிகர்களால் எழுப்பப்பட்டது. ஆனால் வலைப்பயிற்சிக்கு திரும்பிய ரிஷப் பண்ட், பேட்டிங் மட்டுமல்லாது விக்கெட் கீப்பிங்கிலும் பயிற்சி மேற்கொண்டு எல்லோரையும் ஆச்சரியத்தில் தள்ளினார்.

தோனி
தோனிX

இந்நிலையில் ரிஷப் பண்ட் பேட்டராக மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பராகவும் முழு உடற்தகுதிய எட்டிவிட்டதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

prasidh - shami - pant
சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டன்? தோனியே கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்! யார் மாற்று கேப்டன்?

ஐபிஎல்லுக்கு திரும்பும் பண்ட்.. தொடரிலிருந்து விலகும் ஷமி - பிரசித்!

அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மூன்று வீரர்களின் ஐபிஎல் அப்டேட்களை வெளியிட்டிருக்கும் பிசிசிஐ, “ கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 30 அன்று, உத்தரகாண்டில் உயிருக்கு ஆபத்தான சாலை விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், 14 மாத மறுவாழ்வுக்கு பிறகு 2024 ஐபிஎல் தொடருக்கு விக்கெட் கீப்பர் பேட்டராக முழு உடற்தகுதியுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளார்” என்றும், அதேநேரத்தில் “காயத்தால் அறுவை சிகிச்சை செய்துகொண்ட முகமது ஷமி மற்றும் பிரசித் கிருஷ்னா இருவரும் ஐபிஎல் தொடருக்கு கிடைக்கமாட்டார்கள்” என்றும் அறிவித்துள்ளது.

ரிஷப் பண்ட் குறித்து பேசியிருந்த ஜெய் ஷா, “ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு 2024 டி20 உலகக்கோப்பைக்கு கிடைத்தால் மிகப்பெரிய பலமாக இருக்கும். ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடுகிறார் என்பதை பொறுத்து முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்file

ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு விளையாடும் நிலையில், முகமது ஷமி குஜராத் டைட்டைன்ஸ் அணிக்கும், பிரசித் கிருஷ்ணா ராஜஸ்தான் அணிக்கும் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

prasidh - shami - pant
”CSK அணியை ரோகித் சர்மா வழிநடத்த வேண்டும்” Dhoni-யின் புதிய ரோலை தொடர்ந்து முன்.CSK வீரர் விருப்பம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com