“20 ஒவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவது குறித்து முடிவு செய்ய ரோகித், கோலிக்கு அதிகாரம்” - BCCI

20 ஒவர் உலகக் கோப்பை தொடரில் தாங்கள் விளையாடலாமா வேண்டாமா என முடிவு செய்யும் முழு அதிகாரத்தையும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியிடம் பிசிசிஐ வழங்கியுள்ளது.
 Virat Kohli & Rohit Sharma
Virat Kohli & Rohit SharmaFile Image
Published on

கடந்த ஆண்டு நடைபெற்ற 20 ஒவர் உலகக் கோப்பை தொடருக்கு பின் இந்திய அணிக்காக 20 ஒவர் போட்டிகளில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடாமல் இருந்து வருகின்றனர். ஒருநாள் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு 20 ஒவர் போட்டிகளில் தங்களை தேர்வு செய்ய வேண்டாம் என இருவரும் தெரிவித்திருந்தனர்.

பிசிசிஐ
பிசிசிஐpt desk

இந்நிலையில், அடுத்த நான்கு ஆண்டுகளை கருத்தில் கொண்டு இந்திய அணியை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஒவர் உலகக் கோப்பை நடைபெற உள்ளதால், அந்த அணியில் அவர்கள் இடம் பெறுவார்களா என்ற கேள்விகள் எழுந்து வந்த நிலையில், தற்போது அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 Virat Kohli & Rohit Sharma
“240 ரன்கள் வைத்து விளையாடுவதற்கு இது ஒன்றும் 1990 அல்ல”-கே.எல்.ராகுல் பேட்டிங் மீது கம்பீர் ஆதங்கம்

மீண்டும் 20 ஒவர் போட்டிகளில் விளையாடலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்து கொள்ளும் முழு அதிகாரத்தையும், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியிடம் வழங்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஒருநாள் போட்டிகளுக்கு கே.எல்.ராகுலை இந்திய அணியின் கேப்டனாக நியமனம் செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com