கடினமான நேரத்தில் அஸ்வினுக்காக வாடகை விமானத்தை ஏற்பாடு செய்த பிசிசிஐ! ரவி சாஸ்திரி பாராட்டு!

இந்திய வீரர் அஸ்வினின் குடும்ப அவசரகாலத்தில் பக்கபலமாக இருக்கும் வகையில், அவர் சென்னை செல்லவும் திரும்பவும் வாடகை விமானத்தை பிசிசிஐ ஏற்பாடு செய்ததால் பாராட்டுகளை பெற்றுவருகிறது.
அஸ்வின்
அஸ்வின்X
Published on

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய ஆஃப் ஸ்பின்னர் என்ற இமாலய சாதனையை படைத்த பிறகு, குடும்ப அவசரம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியிலிருந்து பாதியில் சென்னை திரும்பினார் அஸ்வின். அவருடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் பின்னர் வெளியானது.

யாரும் எதிர்பாராத சூழலில் நெருக்கடி காரணமாக அஸ்வின் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்தாலும், பிசிசிஐ அவருக்கு பக்கபலமாக என்ன செய்யவேண்டுமோ அதைசெய்வொம் என உறுதியளித்தது. அஸ்வின் வெளியேற்றம் குறித்து முதல் அறிக்கை வெளியிட்ட பிசிசிஐ, “குடும்ப நெருக்கடி காரணமாக இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியிலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகியுள்ளார். இந்த சவாலான காலங்களில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) இந்திய அணியும் அஸ்வினுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம். என்ன தேவை ஏற்பட்டாலும் செய்ய பிசிசிஐ-ன் கதவு திறந்தே இருக்கும். அஸ்வின் திரும்பும் வரை அவருடைய தனிப்பட்ட விசயங்களில் யாரும் எந்த கருத்தையோ, ஊகத்தையோ செய்ய வேண்டாம்” என்று தெரிவித்தது.

இந்நிலையில் பிசிசிஐ மற்றும் இந்திய அணியின் பக்கபலத்துடன் சென்னை திரும்பிய அஸ்வின், நிலைமை சீரான நிலையில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். அஸ்வின் சென்னை செல்லவும், மீண்டும் ராஜ்கோட் திரும்பவும் வாடகை விமானத்தை பிசிசிஐ ஏற்பாடு செய்ததாகவும், ஒவ்வொரு இந்திய வீரரையும் பாதுகாக்கும் பிசிசிஐ-ன் இத்தகைய செயலை பாராட்டுவதாகவும் முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி புகழ்ந்துள்ளார்.

அஸ்வின்
அவசரமாக சென்னை திரும்பிய அஸ்வின்! 3வது டெஸ்ட் போட்டியிலிருந்து திடீர் விலகல்!

அஸ்வினுக்காக வாடகை விமானத்தை ஏற்பாடு செய்த பிசிசிஐ!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளில் கமெண்டரியில் இருந்த முன்னாள் இந்திய பயிற்சியாளர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சிறந்த செயலை பாராட்டினார்.

இதுகுறித்து பேசிய அவர், “பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அஸ்வினை வீட்டிற்கு அழைத்துச் செல்லவும், மீண்டும் திரும்ப அழைத்து வரவும் ஒரு வாடகை விமானத்தை ஏற்பாடு செய்தார். பிசிசிஐயிடம் இருந்து இது போன்ற விசயங்கள் தேவையென்று நான் நினைக்கிறேன். இந்திய கிரிக்கெட்டின் பாதுகாப்பாளராக பிசிசிஐ செயல்படுகிறது, நீண்டகாலமாக இது செல்வார்கள். இது வீரர்களிடமும் பிசிசிஐ இடமிம் சிறந்த நெருக்கத்தை ஏற்படுத்தும், வீரர்கள் தங்களை சிறப்பு வாய்ந்தவர்களாக உணருவார்கள்” என்று பாராட்டி பேசினார்.

aswin
aswin

பிசிசிஐ-ன் சிறந்த செயலை பாராட்டிய ரவி சாஸ்திரி, அதேவேளையில் உடனடியாக அணிக்கு திரும்பிய ரவிச்சந்திரன் அஸ்வினையும் பாராட்டினார். மீண்டும் அணிக்கு திரும்பிய அஸ்வின், தன்னுடைய 501வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார். 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்துக்கு 557 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இங்கிலாந்து அணி 122 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அஸ்வின்
’கிரிக்கெட் Brand ஆகணும்னு 11 வயசுல மும்பைக்கு வந்துட்டான்’ - பானிபூரி விற்ற ஜெய்ஸ்வால் கடந்த பாதை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com