துலீப் டிராபி: கோலி-ரோகித் பெயர்கள் இல்லை.. 4 கேப்டன்களாக கில், ருதுராஜ், ஸ்ரேயாஸ், அபிமன்யு தேர்வு!

உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான துலீப் டிராபியில் ரோகித் சர்மா, விராட் கோலி உட்பட அனைத்து இந்திய வீரர்களும் இடம்பெறுவார்கள் என கூறப்பட்ட நிலையில், தொடருக்கான நான்கு அணி ஸ்குவாட்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஷ்ரேயாஸ் - ருதுராஜ் - கில் - அபிமன்யு
ஷ்ரேயாஸ் - ருதுராஜ் - கில் - அபிமன்யுweb
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிக்கான எதிர்காலத்தை ஆரோக்கியமாக மாற்றும் வகையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு பிசிசிஐ உடன் ஒப்பந்தத்தில் இருக்கும் அனைத்து இந்திய வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வேண்டும் என்ற அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்தார்.

ஆனால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஐபிஎல்லுக்காக உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவில்லை என ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் மீது நடவடிக்கை எடுத்த பிசிசிஐ, அவர்களுடனான மத்திய ஒப்பந்தத்தை ரத்து செய்தது. ஸ்ரேயாஸ் ஐயர் உடல்நிலை காரணமாக சிலபோட்டிகளில் விளையாட முடியாமல் போனாலும் ரஞ்சிக்கோப்பை நாக்அவுட் போட்டிகளில் பங்கேற்று விளையாடினார். அதனால் அவர் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்திய அணியுடன் இணைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இந்தியாவின் நிரந்தர விக்கெட் கீப்பராக பார்க்கப்பட்ட இஷான் கிஷன், ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த வீரராக இருந்தபோதும் இன்னும் பிசிசிஐ அவரை ஒப்பந்தபட்டியலில் இணைக்கவில்லை. “வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் விளையாடாவிட்டால் விளைவு அதிகமாக இருக்கும்” என பிசிசிஐ தரப்பு மீண்டும் ஒருமுறை கூறியது.

india test team
india test team

இந்நிலையில் கவுதம் கம்பீர் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு, மூத்த வீரர்கள் முதல் இளம் வீரர்கள் வரை அனைவரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாட வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. அதனால் நடக்கவிருக்கும் துலீப் டிராபியில் ரோகித் சர்மா, விராட் கோலி உட்பட அனைத்து இந்திய வீரர்களும் பங்கேற்று விளையாடுவார்கள் என்ற செய்திகள் வெளியாகின. அதற்கான காரணமாக இந்திய டெஸ்ட் அணியில் சிறந்த வீரர்கள் ஆப்சன்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோணத்தில் பிசிசிஐ செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஷ்ரேயாஸ் - ருதுராஜ் - கில் - அபிமன்யு
உள்நாட்டு கிரிக்கெட் தொடருக்கு திரும்பும் ’கோலி, ரோகித், அஸ்வின்’? கம்பீர் எடுத்த முடிவு என்ன?

துலீப் டிராபிக்கான அணிகள் அறிவிப்பு!

செப்டம்பர் 5-ம் தேதி முதல் தொடங்கவிருக்கும் துலீப் டிராபிக்கான தொடருக்கான முதல் சுற்று அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா, அஸ்வின், ஷமி முதலிய வீரர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. மாறாக நீண்ட இடைவெளியிலிருந்து வரும் ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் முதலிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இளம்வீரர் நிதிஷ் ரெட்டி மற்றும் இஷான் கிஷனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நான்கு அணிகளின் கேப்டன்களாக சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், அபிமன்யு ஈஸ்வரன் முதலிய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கில்
கில்

துலீப் டிராபியில் பங்கேற்கும் 4 அணிகள்:

அணி A : சுப்மன் கில் (கேப்டன்), மயங்க் அகர்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், கேஎல் ராகுல், திலக் வர்மா, ஷிவம் துபே, தனுஷ் கோட்டியன், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, ஆவேஷ் கான், வித்வத் கவேரப்பா, குமார் குஷாக்ரா , ஷாஸ்வத் ராவத்.

அபிமன்யு ஈஸ்வரன்
அபிமன்யு ஈஸ்வரன்

அணி B : அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான், ரிஷப் பந்த், முஷீர் கான், நிதிஷ் குமார் ரெட்டி*, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், யஷ் தயாள், முகேஷ் குமார், ராகுல் சாஹர், ஆர் சாய் கிஷோர், மோஹித் அவஸ்தி , என் ஜெகதீசன் (விக்.கீப்பர்).

ருதுராஜ் கெய்க்வாட்
ருதுராஜ் கெய்க்வாட்

அணி C: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சாய் சுதர்சன், ரஜத் படிதார், அபிஷேக் போரல் (விக்.கீப்பர்), சூர்யகுமார் யாதவ், பி இந்திரஜித், ஹிருத்திக் ஷோக்கீன், மானவ் சுதர், உம்ரான் மாலிக், வைஷாக் விஜய்குமார், அன்ஷுல் கம்போஜ், ஹிமான்ஷு சவுகான், மயங்க் மார்கண்டே, மயங்க் மார்கண்டே (விக்.கீப்பர்), சந்தீப் வாரியர்.

ஷ்ரேயாஸ் ஐயர்
ஷ்ரேயாஸ் ஐயர்

அணி D: ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அதர்வா தைதே, யாஷ் துபே, தேவ்தத் படிக்கல், இஷான் கிஷன் (விக்.கீப்பர்), ரிக்கி புய், சரண்ஷ் ஜெயின், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஆதித்யா தாகரே, ஹர்ஷித் ராணா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சென்குப்தா, கே.எஸ். பரத் (விக்.கீப்பர்), சௌரப் குமார்.

ஷ்ரேயாஸ் - ருதுராஜ் - கில் - அபிமன்யு
ஆஸ்திரேலியாவா? இந்தியாவா?.. ரிக்கி பாண்டிங்கிற்கு பதிலடி கொடுத்த ரவி சாஸ்திரி!

3 சுற்றுகளாக நடைபெறும் துலீப் டிராபி:

துலீப் டிராபி 3 சுற்றுகளாக நடைபெறும் நிலையில், இது முதல் சுற்றுக்கான அணிதான் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமிருக்கும் சுற்றுகளில் வங்கதேச தொடரில் இடம்பெறும் அனைத்து இந்திய வீரர்களும் பங்கேற்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின், ஷமி முதலிய மூத்தவீரர்கள் இடம்பெறுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. பும்ராவிற்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Duleep Trophy
Duleep Trophy

துலீப் டிராபியானது 1961-1962ல் தொடங்கப்பட்டது. பல ஆண்டுகளாக பல மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்ட இந்த தொடரானது சமீபத்தில் ஒவ்வொரு இந்திய மண்டலத்தையும் குறிக்கும் வகையில் 6 மண்டல அணிகளாக பிரிக்கப்பட்டு விளையாடப்பட்டது. தற்போது அது மாற்றப்பட்டு இந்தியா ஏ, இந்தியா பி, இந்தியா சி மற்றும் இந்தியா டி ஆகிய நான்கு அணிகள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டுள்ளது.

இந்ததொடர் ஒரு ரவுண்ட்-ராபின் முறையில் விளையாடப்படுகிறது, மூன்று சுற்றுகளாக நடைபெறும் தொடரில் அனைத்து அணிகளும் ஒன்றையொன்று எதிர்கொண்டு விளையாடவிருக்கின்றன. மூன்று சுற்றுகள் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும்.

Duleep Trophy
Duleep Trophy

2024 துலீப் டிரோபி முதல் சுற்று போட்டிகள் ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மற்றும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தொடங்க உள்ளன.

ஷ்ரேயாஸ் - ருதுராஜ் - கில் - அபிமன்யு
இந்திய வீரர்களுக்கு ODI கிரிக்கெட் மறந்துபோச்சா? இலங்கைக்கு எதிரான படுதோல்விக்கு 3முக்கிய காரணங்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com