’ரோகித், விராட் IN..ஹர்திக் இருந்தும் SKY கேப்டன்!’ இலங்கை தொடருக்கான இந்திய அணிகளை அறிவித்தது BCCI!

இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.
T 20 உலகக்கோப்பையுடன் இந்திய அணி
T 20 உலகக்கோப்பையுடன் இந்திய அணிட்விட்டர்
Published on

2024 டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து ஜூலை 27 முதல் ஆகஸ்டு 7ம் வரை, 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடவிருக்கிறது.

முதலில் ஒருநாள் தொடரில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா மூன்று பேரும் பங்கேற்க மாட்டார்கள் எனவும், ஹர்திக் பாண்டியாவும் தனிப்பட்ட காரணங்களுக்காக பங்கேற்க மாட்டார் எனவும் கூறப்பட்டது. ஆனால் சாம்பியன்ஸ் டிராபியை எதிர்நோக்கி முழுமையான இந்திய அணியும் பங்கேற்க வேண்டுமென புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கோரிக்கை வைத்ததால், இலங்கை தொடருக்கான அணித்தேர்வு கூட்டம் மூன்றுமுறை தள்ளிவைக்கப்பட்டது.

ரோகித், விராட் ஜெர்சி
ரோகித், விராட் ஜெர்சிஎக்ஸ் தளம்

முடிவில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் தொடருக்கு திரும்புவார்கள் என செய்தி வெளியான நிலையில், தற்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

T 20 உலகக்கோப்பையுடன் இந்திய அணி
“லீவ் கேன்சல் பண்ணிட்டு ODI தொடருக்கு வாங்க..” சீனியர் வீரர்களுக்கு கவுதம் கம்பீர் கோரிக்கை!

ஒருநாள் அணிக்கு திரும்பிய ரோகித்-விராட்!

ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் திரும்பியுள்ளனர். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா மூன்றுபேரும் இடம்பெறவில்லை. சுப்மன் கில் துணைக்கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் அணிக்கு திரும்பியுள்ளனர். சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சனுக்கு ஒருநாள் அணியில் இடம் கிடைக்கவில்லை, மாறாக ஹர்ஷித் ரானா மற்றும் ரியான் பாராக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

shreyas - gambhir - rana
shreyas - gambhir - ranaweb

ODI தொடருக்கு இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கேஎல் ராகுல் (WK), ரிஷப் பந்த் (WK), ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ரானா.

T 20 உலகக்கோப்பையுடன் இந்திய அணி
'இந்திய கிரிக்கெட்டின் இளவரசி'- யாரும் படைக்காத 10 சாதனைகள்! ஸ்மிரிதி மந்தனா எனும் அசாத்தியம்!

ஹர்திக் பாண்டியா அணியில் இருந்தும் SKY கேப்டன்!

டி20 தொடருக்கான அணியில் ஹர்திக் பாண்டியா அணியில் இருந்தபோதும் சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணைக்கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே மூன்று வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். ரியான் பராக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

hardik pandya
hardik pandyaஎக்ஸ் தளம்

டி20 தொடருக்கு இந்திய அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த் (கீப்பர்), சஞ்சு சாம்சன் (கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் , கலீல் அகமது, முகமது சிராஜ்.

இரண்டு தொடரிலும் இடம்பெற்றுள்ள வீரர்கள்: சுப்மன் கில், ரிஷப் பண்ட், ரியான் பராக், அக்சர் படேல், வாசிங்டன் சுந்தர், கலீல் அகமது, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.

T 20 உலகக்கோப்பையுடன் இந்திய அணி
சச்சின், கோலிக்கு பிறகு SENA நாடுகளில் சதமடித்த ஒரே IND வீரர்.. பிரம்மிக்க வைக்கும் ஸ்மிரிதி மந்தனா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com