'கோலியை சைலன்ட்டாக காலி செய்கிறார்.. கம்பீர் செய்த மிகப்பெரிய தவறு..?' - முன். PAK வீரர் விமர்சனம்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக மோசமாக செயல்பட்டதாக இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரை முன்னாள் பாகிஸ்தான் வீரர் விமர்சித்துள்ளார்.
கவுதம் கம்பீர்
கவுதம் கம்பீர்web
Published on

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. மூன்று போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து அணி, பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என மூன்றுபிரிவிலும் இந்தியாவை டாமினேட் செய்தது.

முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியது மட்டுமில்லாமல், 3-0 என இந்தியாவை அவர்களின் சொந்த மண்ணிலேயே வைத்து ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்தது.

ind vs nz
ind vs nz

இந்தியா படுமோசமான தொடர் தோல்வியை சந்தித்த பிறகு, மோசமான ஆடுகளத்தை தயார் செய்து இந்தியாவின் சிறந்த பேட்டர்களை சுமாரான பவுலர்களுக்கு எதிராக கூட விளையாட முடியாதவாறு செய்துவிட்டார்கள் என பல முன்னாள் வீரர்கள் குற்றஞ்சாட்டினர்.

அந்தவகையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாசித் அலி, மோசமான ஆடுகளத்தை தயார் செய்ததற்காக கவுதம் கம்பீரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கவுதம் கம்பீர்
த்ரில் போட்டி: AUS மண்ணில் வித்தை காட்டிய PAK பவுலர்கள்.. தனியாளாக வெற்றியை தட்டிப்பறித்த கம்மின்ஸ்!

கம்பீரை விட டிராவிட் புத்திசாலி..

மோசமான ஆடுகளத்தை தயார் செய்ததற்காக கவுதம் கம்பீரை விமர்சித்த முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாசித் அலி, கம்பீரை விட டிராவிட் புத்திசாலியான பயிற்சியாளர் என்று கூறினார்.

இதுகுறித்து யூடியூப் சேனலில் பேசியிருக்கும் அவர், “கௌதம் கம்பீரை விட ராகுல் டிராவிட் புத்திசாலியான பயிற்சியாளர். இந்தியாவில் விளையாடும்போது டிராவிட் நான்கு நாட்கள் விளையாடக்கூடிய பிட்ச்களை உருவாக்கினார், அப்படியான பிட்ச்களில் கடைசி இரண்டு நாட்களில் தான் பந்து திரும்பும். ஆனால் கம்பீர் உருவாக்கிய ஆடுகளங்கள் முதல் நாளிலேயே அங்கும் இங்குமாக திரும்பியது. இதுபோலான பிட்ச்களில் வழக்கமான ஸ்பின்னர் இல்லாமல் சுமாரான ஸ்பின்னர்கள் கூட நிறைய திருப்பங்களை பெற்றனர்.

gambhir - dravid
gambhir - dravid

ராகுல் டிராவிட் ஒரு நல்ல பயிற்சியாளராக இருந்தார். வீரர்களின் உளவியல் அவருக்கு நன்றாக தெரிந்திருந்தது. ஆனால் கம்பீர் அப்படியில்லை, டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியை டி10 மற்றும் டி20 ஆட்டத்தை விளையாடச் சொல்வது நியாயமற்றது” என்று விமர்சித்து பேசியுள்ளார்.

கவுதம் கம்பீர்
“KKR அணிக்காக அனைத்தையும் கொடுத்துள்ளேன்.. என்னை தக்கவைக்காத போது அழுதேன்..” - வெங்கடேஷ் ஐயர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com