நியூசிலாந்து மண்ணிலேயே அந்த அணியை சம்பவம் செய்த வங்கதேசம்! 98 ரன்னில் சுருட்டி வரலாற்று வெற்றி!

நியூசிலாந்தை அவர்களின் சொந்த மண்ணிலேயே வைத்து வீழ்த்தியிருக்கும் வங்கதேச அணி, தங்களுடைய முதல் வெற்றியை பதிவுசெய்து வரலாறு படைத்துள்ளது.
nz vs ban
nz vs bancricinfo
Published on

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேச அணி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.

nz vs ban
nz vs ban

முதல் போட்டியில் மழை குறுக்கிட்டதால் நியூசிலாந்து அணிக்கு வெற்றி சென்று சேர்ந்தது. இரண்டாவது போட்டியில் வங்கதேச வீரர் சௌமியா சர்கார் 169 ரன்கள் குவித்த போதிலும், வங்கதேச அணியால் வெற்றிபெற முடியவில்லை. இந்நிலையில்தான் இன்று நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் வாங்கிய அடியை திருப்பி கொடுத்து நியூசிலாந்தை துவம்சம் செய்துள்ளது புலிக்குட்டி அணி.

98 ரன்னில் ஆல் அவுட்டான நியூசிலாந்து!

மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷாண்ட்டோ, நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தார். தொடக்க வீரர்களாக களம்கண்ட வில் யங் மற்றும் ரச்சின் ரவிந்திரா இருவருக்கும் எதிராக புதிய பந்தில் ஆட்டம் காமித்தார் தன்சிம் ஹசன். உள்ளே வெளியே என அவர் பந்தை எடுத்துச்செல்ல தடுமாறிய நியூசிலாந்து ஓப்பனர்கள், அவருக்கு எதிராக 3 ஓவர்களை மெய்டன் செய்தனர். ஆனால் இவர்களை அதிக நேரம் களத்தில் நீடிக்க விரும்பாத தன்சிம், ரச்சினை 8 ரன்னில் வெளியேற்றினார். தொடர்ந்து வந்த ஹென்றி நிக்கோலஸை 1 ரன்னில் பெவிலியன் அனுப்பிய தன்சிம் அடுத்தடுத்த இரண்டு விக்கெட்டுகளில் நியூசிலாந்தை திணறடித்தார்.

nz vs ban
nz vs ban

3வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த வில் யங் மற்றும் லாதம் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியை அடுத்தடுத்த இரண்டு ஓவர்களில் லாதமை 21 ரன்கள், வில் யங்கை 26 ரன்கள் என வெளியேற்றிய ஷோரிபுல் அடிக்குமேல் அடிகொடுத்தார். 61 ரன்னுக்கு 4 விக்கெட்டுகள் என இருந்தபோது தொடர்ந்து பந்துவீசிய தன்சிம் மற்றும் ஷோரிபுல் இருவரும் போட்டிப்போட்டுக்கொண்டு விக்கெட்டை வீழ்த்தினர். மிடில் ஆர்டர் வீரர்களுக்கு எதிராக பந்துவீசிய சவுமியா சர்கார் 3 விக்கெட்டுகளை அள்ளி நியூசிலாந்தை தலைகீழாக திருப்பி போட்டார். 31.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 98 ரன்கள் மட்டுமே எடுத்தது.

18-1 என மாறிய வரலாறு! முதல் வெற்றியை பதிவுசெய்த வங்கதேசம்!

99 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய வங்கதேச வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் ஷாண்ட்டோ 8 பவுண்டரிகளை விரட்டி 51 ரன்கள் அடிக்க, 15.1 ஓவரிலேயே இலக்கை எட்டிய வங்கதேச அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது.

nz vs ban
nz vs ban

இந்த வெற்றியின் மூலம் இதுவரை நியூசிலாந்து மண்ணில் ஒரு போட்டியில் கூட வெற்றிபெறாத வங்கதேச அணி, தங்களுடைய முதல் ஒருநாள் போட்டி வெற்றியை பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதுவரை 18 போட்டிகளில் தோல்வியை சந்தித்திருந்த வங்கதேசம் இந்த வெற்றிக்கு பிறகு 18-1 என தங்களுடைய கணக்கை தொடங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com