துலீப் டிராபி| 6 பவுண்டரிகள் 6 சிக்சர்கள்..2 விக்கெட்டுகள்.. 'Allround Show' காமித்த அக்சர் பட்டேல்!

2024 துலீப் டிராபியில் இந்தியா சி அணிக்கு எதிரான போட்டியில் 6 சிக்சர்கள் 6 பவுண்டரிகளுடன் 86 ரன்களை குவித்தார் அக்சர் பட்டேல். ஒரு அசத்தலான இன்னிங்ஸ் மூலம் அவருடைய அணியை உயிர்ப்புடன் வைத்துள்ளார்.
அக்சர் பட்டேல்
அக்சர் பட்டேல்web
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிக்கான எதிர்காலத்தை ஆரோக்கியமாக மாற்றும் வகையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு பிசிசிஐ உடன் ஒப்பந்தத்தில் இருக்கும் அனைத்து இந்திய வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வேண்டும் என்ற அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்தார்.

Duleep Trophy
Duleep Trophy

அதன்படி உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களான புச்சி பாபு கிரிக்கெட் தொடர் முதற்கொண்டு துலீப் டிராபி வரை அனைத்து தொடர்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. புச்சி பாபு தொடர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படுகிறது. அதேபோல மண்டலவாரியான கிரிக்கெட்டாக நடத்தப்பட்ட துலீப் டிராபி இந்தியா ஏ, இந்தியா பி, இந்தியா சி, இந்தியா டி என நான்கு பிரிவுகளாக மாற்றப்பட்டு அதில் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருக்கும் அனைத்து வீரர்களும் இடம்பெற்று விளையாடவிருக்கின்றனர்.

duleep trophy captains
duleep trophy captains

இந்நிலையில் செப்டம்பர் 5-ம் தேதியான இன்று போட்டிகள் தொடங்கப்பட்டது. முதல் போட்டியில் இந்தியா ஏ, இந்தியா பி அணியையும், இரண்டாவது போட்டியில் இந்தியா சி, இந்தியா டி அணியையும் எதிர்த்து விளையாடிவருகிறது.

அக்சர் பட்டேல்
‘நீ அடிச்சது ஒரு புள்ள பூச்சிய..’! 6 ஓவருக்கு 113 ரன்கள் குவித்த ஆஸி! டிராவிஸ் ஹெட் ருத்ரதாண்டவம்!

6 பவுண்டரிகள் 6 சிக்சர்கள்.. தனியாளாக போராடிய அக்சர்!

துலீப் டிராபி தொடருக்கான முதல் சுற்று அணிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இந்தியா ஏ, இந்தியா பி, இந்தியா சி மற்றும் இந்தியா டி முதலிய நான்கு அணிகளின் கேப்டன்களாக சுப்மன் கில், அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர் முதலிய வீரர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று தொடங்கிய துலீப் டிராபியின் இரண்டாவது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா டி அணியை எதிர்த்து விளையாடியது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா டி அணியில், அக்சர் பட்டேலை தவிர ஒருவர் கூட சோபிக்கவில்லை. அபாரமான பந்துவீச்சால் விஜய்குமார் வைசாக் 3 விக்கெட்டுகளும், அன்ஷுல் மற்றும் ஹிமான்சு இருவரும் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்த 76 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது இந்தியா டி அணி. அதர்வா தைதே 4, யாஷ் துபே 10, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 9, படிக்கல் 0, புய் 4, ஸ்ரீகர் பரத் 13 ரன்கள் என அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

என்னதான் ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தன்னுடைய டி20 உலகக்கோப்பை ஃபார்மை மீண்டும் எடுத்துவந்த அக்சர் பட்டேல், 6 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என பறக்கவிட்டு ரன்களை எடுத்துவந்தார். எப்படியும் 200 ரன்களை கடந்து எடுத்துவருவார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தபோது 86 ரன்களில் சிக்சர் லைனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்த இந்தியா டி அணி 164 ரன்கள் எடுத்துள்ளது.

அதற்குபிறகு பேட்டிங் செய்யவந்த இந்தியா சி அணிக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சு தாக்குதலை வெளிப்படுத்திய அக்சர் பட்டேல் ரஜத் பட்டிதாரை போல்டாக்கியும், ஆர்யன் ஜுயலை பந்துவீசிய அவரே கேட்ச் பிடித்தும் வெளியேற்றினார். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்னில் வெளியேறினார்.

முதல் நாள் முடிவில் இந்தியா சி அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்துள்ளது.

அக்சர் பட்டேல்
137 ஆண்டில் முதல் அணியாக பிரமாண்ட சாதனை! பாகிஸ்தானை 2-0 என ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்த வங்கதேசம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com