ரச்சினா? மார்ஸா? பறந்த 30 சிக்சர்கள்! இதுதான் ரியல் டி20! நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸி. த்ரில் வெற்றி!

நியூசிலாந்துக்கு எதிரான தொடரை முதல் டி20 போட்டியில் ஒரு த்ரில்லர் வெற்றியுடன் தொடங்கியுள்ளது ஆஸ்திரேலியா அணி.
நியூசிலாந்து - ஆஸ்திரேலியா
நியூசிலாந்து - ஆஸ்திரேலியாCricinfo
Published on

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு மிட்செல் மார்ஸ் தலைமையிலான அணி களம்கண்டுள்ளது.

6 சிக்சர்களை விரட்டி கெத்துக்காட்டிய ரச்சின்!

நியூசிலாந்தின் வெல்லிங்டனில் தொடங்கிய முதல் டி20 போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

டெவான் கான்வே
டெவான் கான்வே

முதலில் பேட்டின் செய்த நியூசிலாந்து அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் ஃபின் ஆலன்ம் டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவிந்திரா மூன்று பேரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆலன் 32 ரன்களில் வெளியேற, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவான் கான்வே, 46 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்சர்களை விரட்டி 63 ரன்கள் எடுத்தார்.

rachin
rachin

ஒருபக்கம் அதிரடியில் மிரட்டிய ரச்சின் ரவிந்திரா, 35 பந்துகளில் 6 சிக்சர்கள், 2 பவுண்டரிகளை பறக்கவிட்டு 68 ரன்கள் சேர்த்து நியூசிலாந்து அணியை 215 ரன்களுக்கு எடுத்துச்சென்றார்.

நியூசிலாந்து - ஆஸ்திரேலியா
கடினமான நேரத்தில் அஸ்வினுக்காக வாடகை விமானத்தை ஏற்பாடு செய்த பிசிசிஐ! ரவி சாஸ்திரி பாராட்டு!

கடைசி நேரத்தில் டிம் டேவிட் நிகழ்த்திய மேஜிக்!

216 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில், தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தாலும் அவர்களை நிலைக்க விடாத நியூசிலாந்து அணி விக்கெட்டுகளை வீழ்த்திக்கொண்டே இருந்தது.

டேவிட் வார்னர்
டேவிட் வார்னர்

ஆனால் ஒருபுறம் நிலைத்து நின்ற கேப்டன் மிட்செல் மார்ஸ் அரைசதம் அடித்து, போட்டியை எந்த இடத்திலும் நியூசிலாந்தின் பக்கம் செல்லாமல் பார்த்துக்கொண்டார். மேக்ஸ்வெல் 2 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என துவம்சம் செய்ய அவரையும் 25 ரன்னில் வெளியேற்றினார் லாக்கி பர்குஷன். உடன் களமிறங்கிய ஜோஸ் இங்கிலிஸும் 20 ரன்னில் வெளியேற, போட்டியை வெற்றிக்கு அழைத்துச்செல்லவேண்டிய பொறுப்பு கடைசி பேட்டிங் இணையான மிட்செல் மார்ஸ் மற்றும் டிம் டேவிட் இடம் சென்றது.

மிட்செல் மார்ஸ்
மிட்செல் மார்ஸ்

கடைசி 2 ஓவருக்கு 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு போட்டி செல்ல, கடைசி இரண்டு ஓவரில் 3 சிக்சர்கள்ம், 2 பவுண்டரி என துவம்சம் செய்த டிம் டேவிட் மிரட்டினார். கடைசி 3 பந்துக்கு 12 என போட்டி மாற சிக்சர், பவுண்டரி, 2 ரன்கள் என டிம் டேவிட் அடிக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது ஆஸ்திரேலியா அணி. இறுதிவரை நிலைத்து நின்ற கேப்டன் மிட்செல் மார்ஸ் 44 பந்துகளில் 7 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் அடித்தார்.

டிம் டேவிட்
டிம் டேவிட்

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் விளையாடிய அனைத்து வீரர்களும் சிக்சர்களை பதிவுசெய்தனர், மொத்தமாக 30 சிக்சர்கள் இரண்டு இன்னிங்ஸிலும் அடிக்கப்பட்டது. கைக்கு வந்த கேட்ச்களை கோட்டைவிட்ட நியூசிலாந்து அணி போட்டியிலும் கோட்டைவிட்டது. இந்த போட்டியில் பங்கேற்றதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்காக அதிக (104) டி20 போட்டிகளில் விளையாடிய வீரராக மேக்ஸ்வெல்லும், நியூசிலாந்துக்காக அதிக (113) டி20 போட்டிகளில் விளையாடிய வீரராக டிம் சவுத்தீயும் மாறியுள்ளனர்.

மிட்செல் சாண்ட்னர்
மிட்செல் சாண்ட்னர்

3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது ஆஸ்திரேலியா அணி. டி20 உலகக்கோப்பைக்கு முந்தைய டி20 தொடர் என்பதால், இரண்டு அணிகளுக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து - ஆஸ்திரேலியா
“MS தோனியால் கிரிக்கெட் வாழ்க்கையை இழந்தோம்” குற்றச்சாட்டு வைத்த முன்னாள் வீரர்கள்..10 பேரின் கதை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com