ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை பாக்ஸிங் டே போட்டியாக நடைபெறுகிறது. தொடரை சமன்செய்யும் முனைப்பில் பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது.
டெஸ்ட் போட்டிகளுக்கு இடையே மனதை கவரும் வகையிலான செயலில் பாகிஸ்தான் வீரர்கள் செயல்பட்டனர். மெல்போர்னில் MCG கிரவுண்டில் பயிற்சியில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்கள், ஆஸ்திரேலிய வீரர்களின் பயிற்சி வலைகளுக்குச் சென்று கிறிஸ்துமஸைக் கொண்டாடினர்.
அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கிய பாகிஸ்தான் வீரர்கள் மகிழ்ச்சியான ஒரு சூழலை உருவாக்கினர். அப்போதுதான் பாபர் அசாமை ஆஸ்திரேலியா வீரர் உஸ்மான் கவஜாவின் மகள், கை நீட்டியதும் ஓடிவந்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை கட்டிக்கொண்டார்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு பிறகு பாகிஸ்தான் வீரர்கள் ஆஸ்திரேலிய வீரர்களின் குழந்தைகளுக்கு மிட்டாய்களையும், பரிசுப்பெட்டிகளையும் வழங்கினர். அப்போது உஸ்மான் கவாஜாவின் மூத்த மகள் பாபர் அசாமை கட்டிக்கொண்ட அழகான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், “ பாபர் அசாம் உஸ்மான் காவாஜா மகளை கைநீட்டி அழைக்கிறார். அந்த குழந்தை ஓடிச்சென்று அவரை கட்டிக்கொண்டது.” இந்த அழகான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.