’முதல் முறை.. ஒரு AUS வீரரால் கூட முடியவில்லை!’ - PAK-க்கு எதிராக தேவையற்ற சாதனை படைத்த ஆஸ்திரேலியா!

பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்திருக்கும் ஆஸ்திரேலியா அணி மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளது.
pak vs aus
pak vs ausweb
Published on

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது முதலில் நடைபெற்ற நிலையில், முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றிபெற்று தொடர் 1- 1 என சமன்பெற்றது.

இந்நிலையில் தொடர் வெற்றி யாருக்கு என்பதை உறுதிசெய்யும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் நடைபெற்றது.

pak vs aus
‘இருங்க பாய்..’ - வேகப்பந்தில் மிரட்டிய PAK.. 22 ஆண்டுக்கு பின் AUS மண்ணில் தொடரை கைப்பற்றி வரலாறு!

22 ஆண்டுக்கு பின்தொடரை வென்ற பாகிஸ்தான்..

கேரி கிர்ஸ்டன் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கம், பாபர் அசாம் கேப்டன் பதவியிலிருந்து நீக்கம், மோசமான தோல்விகள், கடுமையான விமர்சனங்கள் என பல்வேறு பிரச்னைகளுடன் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா வந்தது. அவர்களை முன்னாள் ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சளரான கில்லஸ்பி தலைமை பயிற்சியாளராக வழிநடத்தினார்.

அனுபவம் வாய்ந்த முன்னாள் ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர் வழிகாட்டுதலாலும், முகமது ரிஸ்வானின் அற்புதமான கேப்டன்சியாலும் பாகிஸ்தான் அணி 3வது ஒருநாள் போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றியது.

22 வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் ஒருநாள் தொடரை வென்ற பாகிஸ்தான், 2002-ம் ஆண்டுக்கு பிறகு வரலாறு படைத்தது.

pak vs aus
2024 - 25 பார்டர் கவாஸ்கர் டிராபி | இந்தியாவுக்கு எதிராக வலுவான டெஸ்ட் அணியை அறிவித்த ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா படைத்த மோசமான சாதனை..

சொந்த மண்ணில் தொடரை இழந்தது மட்டுமில்லாமல், படைக்கக்கூடாத மோசமான சாதனையையும் படைத்துள்ளது ஆஸ்திரேலியா அணி.

அதன்படி ஒருநாள் தொடர் முழுவதும் ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா, ஷாகீன் அப்ரிடி முதலிய 3 பாகிஸ்தான் பவுலர்களின் மிரட்டலான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய ஆஸ்திரேலியா அணியில் ஒருவீரர் கூட அரைசதம் கூட அடிக்கவில்லை. அதிகபட்சமாக ஜோஸ் இங்கிலீஸ் முதல் போட்டியில் 49 ரன்கள் அடித்திருந்தார்.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணியில் ஒருவீரர் கூட அரைசதமடிக்காதது இதுவே முதல்முறையாக பதிவுசெய்யப்பட்டது.

இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நவம்பர் 14ம் தேதி தொடங்கவிருக்கிறது.

pak vs aus
த்ரில் போட்டி: AUS மண்ணில் வித்தை காட்டிய PAK பவுலர்கள்.. தனியாளாக வெற்றியை தட்டிப்பறித்த கம்மின்ஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com