“தொடரை இழந்ததற்கு நானும் ஒரு பெரிய காரணம்..” - NZ-க்கு எதிரான தோல்வி குறித்து எமோஷனலாக பேசிய அஸ்வின்

18 ஹோம் டெஸ்ட் தொடர்களை வரிசையாக வென்ற ஒரே அணி என்ற உலக சாதனை படைத்த இந்திய அணி, சொந்த மண்ணில் 3-0 என படுமோசமான தோல்வியை முதல்முறையாக எதிர்கொண்டது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அஷ்வின்
அஷ்வின்web
Published on

அஸ்வின், ஜடேஜா இருவரும் இருக்கும் வரை இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வேறு எந்த அணியாலும் வெல்ல முடியாது என்ற கூற்றை பல உலக கிரிக்கெட்டர்கள் கூட ஆணித்தரமாக கூறியுள்ளார். அதற்கு சான்றாக 12 வருடங்களாக சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, தொடர்ச்சியாக 18 டெஸ்ட் தொடர்களில் தோல்வியே சந்திக்காமல் ஆதிக்கம் செலுத்தியது. இதில் ஒரு அணிகூட தொடரை சமன்கூட செய்ய முடியவில்லை என்பதுதான் இந்திய அணியை வேறு ஒரு உயரத்தில் வைத்திருந்தது.

ஆனால் இவையனைத்தையும் முடிவுக்கு கொண்டுவரும் விதமாக விளையாடிய 3 போட்டிகளிலும் 3-0 என வென்ற நியூசிலாந்து அணி, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை ஒயிட்வாஷ் செய்த முதல் அணி என வரலாற்று சாதனையை படைத்தது.

ashwin
ashwin

இந்நிலையில் 6 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் வெறும் 9 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியிருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், வரலாற்று தோல்விக்கு பிறகு மிகப்பெரிய ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். இந்த மிகப்பெரிய தோல்விக்கு ‘போட்டியில் என்னுடைய பங்களிப்பு சரியாக இல்லை’ என்பதை சுட்டிக்காட்டிய அஸ்வின், தோல்விக்கு தானும் ஒரு பெரிய காரணம் என்பதை முன்னிறுத்தி உள்ளார்.

அஷ்வின்
இதுவே முதல்முறை..! R136 நட்சத்திரக் கூட்டத்திலிருந்து வெளியேறிய 55 நட்சத்திரங்கள்; செல்வது எங்கே?

2-3 நாட்கள் என்ன செய்வதென்றே தெரியவில்லை..

தன்னுடைய யூ-டியூப் சேனலில் இந்தியாவின் தோல்வி குறித்து பேசியிருக்கும் அஸ்வின், “நியூசிலாந்திடம் 3-0 என்ற கணக்கில் நாங்கள் தோல்வியடைந்தோம். இதுபோல வரலாற்றில் எப்போதும் இந்தியாவில் நடந்ததில்லை என்று நான் படித்தேன். அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று உண்மையில் எனக்குத் தெரியவில்லை. இரண்டு மூன்று நாட்கள் என்ன செய்வதென்று கூட எனக்கு புரியவில்லை. எனது தொழில் மற்றும் கிரிக்கெட் வாழ்க்கை அனுபவத்தில் இது ஒரு சிதறடிக்கும் அனுபவமாக இருந்தது.

ashwin
ashwin

நான் இந்த தோல்விக்கு மற்றவர்களை குறைகூறும் நபர் அல்ல, முதலில் நான் என்னிடமே அதிகமாக எதிர்ப்பார்க்கிறேன். பந்துவீச்சை விட லோயர் பேட்டிங்கில் என்னால் ரன்களை அடிக்க முடியவில்லை என்பதுதான் பெரிய வேதனையாக இருந்தது. கடைசியாக ரன்களை அடிப்பது எப்போதும் அணிக்கு தேவையானதாக இருந்தது, பல நல்ல தொடக்கம் கிடைத்தும் நான் என்னுடைய விக்கெட்டை தவறான நேரத்தில் இழந்தேன். கடைசி டெஸ்ட் போட்டியில் கூட வெற்றிக்கு குறைவான ரன்கள் இருந்தபோது தவறாக விக்கெட்டை இழந்தேன். இந்த பெரிய தோல்விக்கு நானும் ஒரு காரணம்.

ashwin
ashwin

பலர் வீரர்களான எங்களுக்கு எந்தவிதமான வேதனையும் இல்லை, பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற விமர்சங்களை வைத்தனர். எனக்கு புரிகிறது; இந்திய ரசிகர்கள் அனைவரும் மிகப்பெரிய வேதனையில் இருக்கிறார்கள். ஆனால் உங்கள் எல்லோரையும் விட அணியின் வீரர்கள் அனைவருக்கும் அதிகப்படியான வலியும், வேதனையும் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது” என்று தன்னுடைய ஏமாற்றத்தையும், வேதனையையும் அஸ்வின் பகிர்ந்துள்ளார்.

அஸ்வின் 6 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 8.50 சராசரியுடன் வெறும் 51 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

அஷ்வின்
‘இருங்க பாய்..’ - வேகப்பந்தில் மிரட்டிய PAK.. 22 ஆண்டுக்கு பின் AUS மண்ணில் தொடரை கைப்பற்றி வரலாறு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com