இனிமேல் ஒருத்தர் பொறந்துதான் வரணும்.. யாரும் செய்யாத தரமான சம்பவம்! அஸ்வின் படைத்த 5 இமாலய சாதனைகள்!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்தது மட்டுமில்லாமல், 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனைகளை குவித்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
ரவி அஸ்வின்
ரவி அஸ்வின்cricinfo
Published on

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரவிச்சந்திரன் அஸ்வினின் 113 ரன்கள் சதத்தால் முதல் இன்னிங்ஸில் 376 ரன்களை குவித்தது.

அதற்குபிறகு முதல் இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி, பும்ராவின் 4 விக்கெட்டுகள் என்ற அபாரமான பந்துவீச்சால் 149 ரன்களுக்கு சுருண்டது.

அஸ்வின்
அஸ்வின்

227 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில்லின் அசத்தலான சதங்களால் 287/4 என்ற நிலையில் டிக்ளார் செய்தது. மிகப்பெரிய இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி, ரவிச்சந்திரன் அஸ்வினின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 234 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி 280 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

ashwin
ashwin

இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியது மட்டுமில்லாமல் 113 ரன்கள் அடித்த அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ஒரே போட்டியில் 5 இமாலய சாதனைகளை அஸ்வின் படைத்து அசத்தியுள்ளார்.

ரவி அஸ்வின்
’எம்.எஸ்.தோனி ரெக்கார்டு முறியடிப்பு..’ வங்கதேச டெஸ்ட்டில் அஸ்வின் படைத்த 3 இமாலய சாதனைகள்!

1) 4வது இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகள்..

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் இந்தியாவுக்காக 4வது இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய அனில்கும்ப்ளேவின் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளார்.

அஸ்வின்
அஸ்வின்

இந்தியாவுக்காக 4வது இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகள்:

* ரவிச்சந்திரன் அஸ்வின் - 99 விக்கெட்டுகள்

* அனில் கும்ப்ளே - 94 விக்கெட்டுகள்

* பிஷன் பேடி - 60 விக்கெட்டுகள்

* இஷாந்த் சர்மா / ரவீந்திர ஜடேஜா - 54 விக்கெட்டுகள்

ரவி அஸ்வின்
’அஸ்வின் எனக்கு விவிஎஸ் லட்சுமணனை நினைவூட்டுகிறார்; சிறந்த மேட்ச் வின்னர்’ - முன். வீரர் பாராட்டு!

2) டெஸ்ட்டில் அதிக 5 விக்கெட்டுகள்..

வங்கதேசத்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் பட்டியலில் ஷேன் வார்னேவின் சாதனையை சமன்செய்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அஸ்வின் இதுவரை 37 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

அஸ்வின்
அஸ்வின்

டெஸ்ட்டில் அதிக 5 விக்கெட் வீழ்த்தியவர்கள்:

* முரளிதரன் - 67 முறை (133 போட்டிகள்)

* ரவிச்சந்திரன் அஸ்வின்* - 37 முறை (101 போட்டிகள்) *

* ஷேன் வார்னே - 37 முறை (145 போட்டிகள்)

* ரிச்சர்ட் ஹாட்லீ - 36 முறை (86 போட்டிகள்)

* அனில் கும்ப்ளே - 35 முறை (132 போட்டிகள்)

ரவி அஸ்வின்
’இனி அவர் கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவுதான்..’ சதமடித்து உலகத்தின் கூற்றை மாற்றிய ரிஷப் பண்ட்!

3) 4வது இன்னிங்ஸில் அதிக 5 விக்கெட்டுகள்..

டெஸ்ட் கிரிக்கெட்டில் 37வது முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின், 4வது இன்னிங்ஸில் 7வது முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்தப்பட்டியலில் 4வது இன்னிங்ஸில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷேன் வார்னே மற்றும் முரளிதரன் இவருவரையும் சமன்செய்துள்ளார் அஸ்வின். முதல் இடத்தில் 12முறை கைப்பற்றி இலங்கையின் ரங்கனா ஹெராத் நீடிக்கிறார்.

அஸ்வின்
அஸ்வின்

4வது இன்னிங்ஸில் அதிக 5 விக்கெட்டுகள்:

* ரங்கனா ஹெராத் - 12 முறை

* ரவிச்சந்திரன் அஸ்வின் / ஷேன் வார்னே / முரளிதரன் - 7 முறை

ரவி அஸ்வின்
'தோனியைவிட சிறந்தவர் ரிஷப் பண்ட்; விளையாட்டுத்தனமாக எண்ணிவிடவேண்டாம்'- எச்சரிக்கும் ரிக்கி பாண்டிங்!

4) வரலாற்றில் முதல்வீரராக சாதனை..

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் யாரும் படைக்காத சாதனையை தன்பெயரில் எழுதினார்.

அதாவது ஒரு மைதானத்தில் இரண்டுமுறை ஒரு டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே உலக வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.

அஸ்வின்
அஸ்வின்

* சென்னை (2021) - இங்கிலாந்து vs இந்தியா - 106 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகள்

* சென்னை (2024) - வங்கதேசம் vs இந்தியா - 113 ரன்கள் மற்றும் 6 விக்கெட்டுகள்

ரவி அஸ்வின்
சச்சின், கோலி சாதனைக்கு ஆபத்து.. SA-க்கு எதிராக தொடரை வென்று ஆப்கானிஸ்தான் வரலாறு! 5 தரமான சாதனைகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com