2024 டி20 உலகக்கோப்பையை குறிவைக்கும் WI! 2 ஆண்டுக்கு பின் திரும்பும் ரஸ்ஸல்! கைல் மேயர்ஸ், பூரன் IN!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான டி20 அணியை அறிவித்துள்ளது.
Andre Russell - Nicholas Pooran
Andre Russell - Nicholas PooranX
Published on

வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. முதலில் தொடங்கிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணியும், இரண்டாவது போட்டியை இங்கிலாந்து அணியும் வென்றிருந்த நிலையில், தொடரை உறுதிச்செய்யும் கடைசி போட்டியானது நேற்று நடைபெற்றது.

3வது போட்டியில் இங்கிலாந்து அணி 40 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில்ல் மழை குறுக்கிட்டதால், வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற 188 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. 31.4 ஓவரிலேயே 6 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டிய விண்டீஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஒரு வரலாற்று தொடரை கைப்பற்றியது. 16 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை வெல்லாத வெஸ்ட் இண்டீஸ் அணி, ஒரு தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Buttler
Buttler

உலகக்கோப்பையை தொடர்ந்து இங்கிலாந்து அணியின் ஒருநாள் தோல்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஜோஸ் பட்லர் இந்த போட்டியிலும் டக் அவுட்டில் வெளியேறி, அவருடைய மோசமான ஃபார்மை தொடர்ந்து வருகிறார்.

2 ஆண்டுக்கு பின் களமிறங்கும் ரஸ்ஸல்! டி20 உலகக்கோப்பையை குறிவைக்கும் WI!

ஒருநாள் தொடரை வென்ற நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியை அறிவித்துள்ளது தலைமை. அடுத்தாண்டு ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரை அமெரிக்காவுடன் வெஸ்ட் இண்டீஸ் அணியும் இணைந்து நடத்தவுள்ள நிலையில், சொந்த மண்ணில் நடைபெறவிருக்கும் கடைசி டி20 தொடர் இதுவாகும். இந்நிலையில் எதிர்வரும் டி20 உலகக்கோப்பையை குறிவைக்கும் நோக்கில், வெஸ்ட் இண்டீஸ் கண்டிசனில் நடைபெறவிருக்கும் 5 போட்டிகள் டி20 தொடருக்கு வலுவான அணியை களமிறக்கியுள்ளது விண்டீஸ் நிர்வாகம்.

Andre Russell
Andre Russell

கடந்த 2021 டி20 உலகக்கோப்பையில் இடம்பிடித்திருந்த அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல், 2 வருடங்களுக்கு மீண்டும் அணிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல் அதிரடி வீரர்களான கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர் மூன்று வீரர்களும் ஒருநாள் தொடரில் விளையாடாத நிலையில் டி20 அணிக்குள் இடம்பிடித்துள்ளனர். மேலும் நான்கு ஆண்டுகளாக டி20 அணியில் இடம்பெறாத ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இடம்பிடித்த ஆல்ரவுண்டர் மேத்யூ ஃபோர்டு முதலிய வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.

Nicholas Pooran
Nicholas Pooran

ரோவ்மன் பவல் கேப்டனாகவும், ஒருநாள் போட்டியில் சதமடித்த ஷாய் ஹோப் துணை கேப்டனாகவும் இடம்பிடித்துள்ளனர். முதல் 3 டி20 போட்டிகளுக்கு மட்டுமே இந்த ஸ்குவாட் என்றும், பின்னர் அணியில் தேவைக்கேற்ப மாற்றம் செய்யப்படும் என்றும் அணித்தேர்வாளர் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான WI டி20 அணி: ரோவ்மன் பவல் (கேப்டன்), ஷாய் ஹோப் (துணை கேப்டன்), ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டே, ஷிம்ரோன் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷெர்ஃபான் ரூத்ரபோர்டு, ரொமாரியோ ஷெப்பர்ட்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com