”பாகிஸ்தானை அவமதிக்க சொல்லவில்லை.. எங்களால் மீண்டும் அவர்களை தோற்கடிக்க முடியும்!” - அமெரிக்க வீரர்

2024 டி20 உலகக்கோப்பையில் மட்டுமல்ல எங்களால் தற்போது கூட பாகிஸ்தானை தோற்கடிக்க முடியும் என்று அமெரிக்க வேகப்பந்துவீச்சாளர் அலி கான் தெரிவித்துள்ளார்.
அலி கான்
அலி கான்web
Published on

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர்ந்து மோசமான சரிவை கண்டுவருகிறது. 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் ஏற்பட்ட அவர்களின் சரிவானது, 2024 டி20 உலகக்கோப்பையில் உச்சம் பெற்றது. எளிதில் வெற்றிபெறவேண்டிய இடத்திலிருந்து அமெரிக்காவுக்கு எதிராக தோற்ற பாகிஸ்தான் அணி, சூப்பர் ஓவர்வரை சென்று படுதோல்வியை சந்தித்தது.

பாகிஸ்தான் அடித்த ஸ்கோரை சமன்செய்த அமெரிக்க அணி, சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய அப்செட் போட்டியை பதிவுசெய்தது. அதனைத்தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை சந்தித்துவரும் பாகிஸ்தான் அணி, சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை சொந்தமண்ணில் இழந்து மோசமான கிரிக்கெட் பயணத்தை கொண்டுள்ளது.

usa vs pak
usa vs pakweb

இந்நிலையில் பாகிஸ்தான் அணி குறித்து பேசியிருக்கும் அமெரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் அலிகான், தற்போதும் பாகிஸ்தானை தங்களால் தோற்கடிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

அலி கான்
’எழுதி முடிச்சுட்டேன்’ | ’96’ பார்ட் 2.. மீண்டும் வரும் ராம்-ஜானு.. இயக்குநர் கொடுத்த செம்ம அப்டேட்!

அவர்களை அவமதிக்க நினைக்கல..

பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்க கிரிக்கெட்டராக இருந்துவரும் அலிகான், 2024 டி20 உலகக்கோப்பையின் போது பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அணிகளுக்கு இடையேயான போட்டியிலும் பங்கேற்றிருந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் அணி குறித்து பேசியிருக்கும் அமெரிக்க வேகப்பந்துவீச்சாளர், தற்போதும் அமெரிக்காவால் பாகிஸ்தானை தோற்கடிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் அலி கான், “டி20 உலகக்கோப்பை போட்டியில் நாங்கள் அழுத்தத்தில் இருக்கவில்லை, ஆனால் பாகிஸ்தான் அழுத்தத்தில் இருந்தது. அவர்களைத் தோற்கடிக்கும் வல்லமை எங்களுக்கு நன்றாகவே தெரியும். உடற்பயிற்சி உட்பட விளையாட்டின் அனைத்து துறைகளிலும் நாங்கள் அவர்களை விட சிறப்பாக இருந்தோம்” என்று பேசியுள்ளார்.

அலி கான்
அலி கான்

மேலும், “எங்களால் பாகிஸ்தானை மீண்டும் வெல்ல முடியும். இதை நான் பாகிஸ்தானை அவமதிக்க வேண்டும் என்று கூறவில்லை, ஆனால் அவர்களை விட நாங்கள் மிகவும் நல்ல அணி, எங்களுடைய எல்லா வீரர்களும் இருந்தால், உலகில் எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும். மீண்டும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினால் நன்றாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

அலி கான்
'தோனியைவிட சிறந்தவர் ரிஷப் பண்ட்; விளையாட்டுத்தனமாக எண்ணிவிடவேண்டாம்'- எச்சரிக்கும் ரிக்கி பாண்டிங்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com