’அஸ்வின் எனக்கு விவிஎஸ் லட்சுமணனை நினைவூட்டுகிறார்; சிறந்த மேட்ச் வின்னர்’ - முன். வீரர் பாராட்டு!

ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய பேட்டிங்கின் மூலம் இன்னொரு விவிஎஸ் லட்சுமணன் போல் விளையாடுவதாக முன்னாள் இந்திய வீரர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
விவிஎஸ் லட்சுமணன் - ரவிச்சந்திரன் அஸ்வின்
விவிஎஸ் லட்சுமணன் - ரவிச்சந்திரன் அஸ்வின்pt
Published on

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரவிச்சந்திரன் அஸ்வினின் தரமான சதம் மற்றும் ஜடேஜாவின் 86 ரன்கள் ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸ் முடிவில் 376 ரன்களை குவித்தது.

ஒரு கட்டத்தில் 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறிய நிலையில், அழுத்தமான நேரத்தில் 8வது வீரராக களத்திற்கு வந்த ரவிச்சந்திரன் அஸ்வின், சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடி சதமடித்தது மட்டுமில்லாமல் இந்தியாவை 376 ரன்களுக்கு எடுத்துச்சென்றார்.

இதேபோல லோயர் ஆர்டரில் களமிறங்கி இந்தியாவிற்கு பல வெற்றிகளை பெற்றுத்தந்தவர் முன்னாள் இந்திய வீரர் விவிஎஸ் லட்சுமணன், அவருடைய ஆட்டத்தை அஸ்வின் அப்படியே வெளிப்படுத்தியதாக முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாராட்டியுள்ளார்.

விவிஎஸ் லட்சுமணன் - ரவிச்சந்திரன் அஸ்வின்
’400 சர்வதேச விக்கெட்டுகள்..’ சாதனை பவுலர்கள் பட்டியலில் இணைந்த பும்ரா!

விவிஎஸ் லட்சுமணனை அஸ்வின் நினைவுபடுத்துகிறார்..

அழுத்தமான நேரத்தில் வந்து இந்தியாவை காப்பாற்றிய அஸ்வினின் அதிரடியான சதம குறித்து பேசியிருக்கும் முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா, லோயர் ஆர்டரில் வந்து இந்தியாவை காப்பாற்றக்கூடிய ஒரு ஆட்டத்தை அஸ்வின் விளையாடியுள்ளார், அவருடைய இந்த ஆட்டம் தனக்கு விவிஎஸ் லட்சுமணனை நினைவுபடுத்துவதாக கூறியுள்ளார்.

அஸ்வின்
அஸ்வின்

அஸ்வின் குறித்து பேசியிருக்கும் ஜடேஜா, “அஸ்வின் முதல் இன்னிங்ஸில் லட்சுமணனைப் போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விவிஎஸ் லட்சுமணன் இந்தியாவுக்காக பல மேட்ச் வின்னிங் நாக்ஸை விளையாடினார், அவர் இந்திய அணிக்காக பெரும்பாலும் குறைவான பேட்டிங் ஆர்டரிலேயே பேட்டிங் செய்தார். உண்மையில், அஸ்வினும் இந்திய அணிக்காக அதையே செய்கிறார்" என்று ஜியோசினிமாவில் அஜய் ஜடேஜா கூறினார்.

அதேபோல அஸ்வின்-ஜடேஜா குறித்து பதிவிட்டிருந்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், “ அஸ்வினும் ஜடேஜாவும் சீரியசான கிரிக்கெட் வீரர்கள், அவர்கள் எத்தனை முறை பேட்டிங்கில் மாயாஜாலம் செய்கிறார்கள். பந்துவீச்சில் சொல்லவே தேவையில்லை!” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

விவிஎஸ் லட்சுமணன் - ரவிச்சந்திரன் அஸ்வின்
’எம்.எஸ்.தோனி ரெக்கார்டு முறியடிப்பு..’ வங்கதேச டெஸ்ட்டில் அஸ்வின் படைத்த 3 இமாலய சாதனைகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com