டிராவிட், புஜாராவிற்கு பின் மோசமாக வெளியேறிய பண்ட்.. 5 விக். அள்ளிய சாண்ட்னர்! சாதனையை நோக்கி NZ!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 0 ரன்னுக்கு ரன்அவுட்டாகி வெளியேறினார் ரிஷப் பண்ட்.
சாண்ட்னர் - பண்ட்
சாண்ட்னர் - பண்ட்cricinfo
Published on

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியானது புனேவில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

rachin
rachin

3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என நியூசிலாந்து முன்னிலை பெற்ற நிலையில், இந்தியா இரண்டாவது டெஸ்ட் போட்டியை வென்று 1-1 என சமன் செய்யுமா என்ற எதிர்பார்ப்புடன் போட்டி தொடங்கியது.

ஆனால் முதல் இன்னிங்ஸில் 156 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டாகி மிகமோசமான நிலையில் பின்தங்கியுள்ளது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்கள் எடுத்துள்ளது.

சாண்ட்னர் - பண்ட்
‘அவரது கேரியரில் மிக மோசமான ஷாட்டை விளையாடினார்..' விராட் கோலி விக்கெட் குறித்து மஞ்ச்ரேக்கர்!

மோசமான முறையில் வெளியேறிய பண்ட்..

நியூசிலாந்து அணி 103 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்கள் அடித்ததால், இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெல்ல இந்தியாவிற்கு 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய டார்கெட்டை நோக்கி விளையாடிய இந்திய அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா விரைவாகவே வெளியேறினாலும் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி அரைசதமடித்து அசத்தினார்.

jaiswal
jaiswal

சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்த மீண்டும் வில்லனாக வந்த மிட்செல் சாண்ட்னர் கில்லை அவுட்டாக்கி வெளியேற்றியது மட்டுமில்லாமல், நிலைத்து நின்று விளையாடிய ஜெய்ஸ்வாலையும் 77 ரன்களில் வெளியேற்றினார்.

pant runout
pant runout

ஜெய்ஸ்வால் அவுட்டாகி வெளியேறிய அடுத்த ஓவரில் ரிஷப் பண்ட் மோசமான முறையில் 0 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். 1990-க்கு பிறகு டிராவிட் , புஜாராவிற்கு பிறகு இந்தியாவின் டாப் 7 பேட்டர்களில் ஒருவர் 0 ரன்னில் ரன் அவுட் மூலம் வெளியேறுவது இது 4வது முறையாகும்.

ரன் அவுட்டில் வெளியேறிய இந்திய டாப் 7 வீரர்கள்: (1990-க்கு பின்)

* ராகுல் டிராவிட் vs PAK லாகூர் - 2004

* சேதேஷ்வர் புஜாரா vs AUS தரம்சாலா - 2017

* சேதேஷ்வர் புஜாரா vs SA செஞ்சுரியன் - 2018

* ரிஷப் பந்த் vs NZ புனே - 2024

சாண்ட்னர் - பண்ட்
'மற்ற PAK வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்..' ஜெர்சியில் வழிந்த ரத்தம்.. வெளியேறாமல் ஆடிய சஜித் கான்!

நம்பிக்கை கொடுத்த கோலியை தூக்கிய சாண்ட்னர்..

ஜெய்ஸ்வால், பண்ட் இருவரும் அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேற இந்திய அணியின் பெரிய நம்பிக்கையாக விராட் கோலி விளங்கினார். ஆனால் சரியான நேரத்தில் 17 ரன்னில் கோலியை LBW மூலம் வெளியேற்றி இந்தியாவின் நம்பிக்கையை உடைத்தார் மிட்செல் சாண்ட்னர்.

அதற்குபிறகு வந்த சப்ராஸ்கானையும் போல்டாக்கி வெளியேற்றிய சாண்ட்னர் இரண்டாவது இன்னிங்ஸிலும் தன்னுடைய 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

இந்திய அணி தற்போதைய நிலையில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்துள்ளது. 181 ரன்கள் தேவையாக உள்ள நிலையில் இந்திய அணியில் ஜடேஜா மற்றும் அஸ்வின் இருவரும் பேட்டிங் செய்து வருகின்றனர்.

12 ஆண்டுகளாக எந்த உலக நாடுகளாலும் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை வெல்லமுடியாத நிலையில், நியூசிலாந்து அணி சாதனையை எட்டிப்பிடிக்க உள்ளது.

சாண்ட்னர் - பண்ட்
‘வேட்டையர்கள் வேட்டையாடப்படும் நாள்’- திணறும் இந்தியா! 156க்கு ஆல் அவுட்..ஆதிக்கம் செலுத்தும் நியூசி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com