சச்சின், கோலி சாதனைக்கு ஆபத்து.. SA-க்கு எதிராக தொடரை வென்று ஆப்கானிஸ்தான் வரலாறு! 5 தரமான சாதனைகள்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல்முறையாக ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.
afg vs sa
afg vs sacricinfo
Published on

தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரானது யுஏஇ-ல் நடைபெற்றுவருகிறது.

முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணி, 106 ரன்களுக்கு ஆல்அவுட் செய்து அபார வெற்றிபெற்றது. முதல்முறையாக ஒயிட்பால் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவை ஆல்அவுட் செய்து வரலாற்றில் இடம்பிடித்தது ஆப்கானிஸ்தான்.

குர்பாஸ்
குர்பாஸ்

அதற்குபிறகு நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியில், தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி 7வது ஒருநாள் சதத்தை பதிவுசெய்தார். குர்பாஸின் சதத்தால் 311 ரன்களை குவித்தது ஆப்கானிஸ்தான் அணி.

தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 73 ரன்கள் வரை ஒருவிக்கெட்டை கூட இழக்காமல் அபாரமாக விளையாடியது. ஆனால் அதற்குபிறகு பந்துவீச வந்த மூத்த சுழற்பந்துவீச்சாளர் ரஷித்கான் விக்கெட் வேட்டை நடத்தினார். 73 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்த தென்னாப்பிரிக்கா, அடுத்த 61 ரன்களுக்குள் மீதமிருக்கும் 9 விக்கெட்டையும் இழந்து ஆல்அவுட்டாகி படுதோல்வியை சந்தித்தது.

அபாரமாக பந்துவீசிய ரஷித்கான் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 20 வயது சுழற்பந்துவீச்சாளரான நங்கெயாலியா கரோட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றிருக்கும் ஆப்கானிஸ்தான் அணி, ஒரு போட்டி மீதமிருக்கையில் தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது.

afg vs sa
’எம்.எஸ்.தோனி ரெக்கார்டு முறியடிப்பு..’ வங்கதேச டெஸ்ட்டில் அஸ்வின் படைத்த 3 இமாலய சாதனைகள்!

ஆப்கானிஸ்தான் படைத்த தரமான 5 சாதனைகள்..

1. விராட் கோலியின் சாதனை சமன்:

22 வயதான ரஹ்மனுல்லா குர்பாஸ் 7வது ஒருநாள் சதத்தை பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் 23 வயதை எட்டுவதற்குள் அதிக ஒருநாள் சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலியின் (7 சதங்கள்) சாதனையை சமன்செய்துள்ளார் குர்பாஸ்.

முதலிடத்தில் 8 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் நீடிக்கிறார், நாளை நடைபெறவிருக்கும் 3வது போட்டியில் சதமடிக்கும் பட்சத்தில், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன்செய்வார் ரஹ்மனுல்லா குர்பாஸ்.

ரஹ்மனுல்லா குர்பாஸ்
ரஹ்மனுல்லா குர்பாஸ்cricinfo

2.அதிக ஒருநாள் சதங்கள்:

7வது ஒருநாள் சதத்தை அடித்திருக்கும் குர்பாஸ், அதிக சர்வதேச ஒருநாள் சதங்கள் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.

குர்பாஸ்
குர்பாஸ்

3. மிகப்பெரிய ஒருநாள் வெற்றி:

311 ரன்கள் குவித்த ஆப்கானிஸ்தான் அணி தென்னாப்ரிக்காவை 134 ரன்களில் ஆல்அவுட் செய்து 177 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்தது. இது ஒருநாள் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் பெற்ற அதிக ரன்கள் வித்தியாசத்திலான வெற்றியாக பதிவுசெய்யப்பட்டது. இதற்கு முன்பு 154 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியிருந்தது ஆப்கானிஸ்தான்.

ரஷீத் கான்
ரஷீத் கான்

4. பிறந்தநாளில் சிறந்த பவுலிங்:

நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய ரஷித் கான், பந்துவீச்சில் 9 ஓவருக்கு 19 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான நாளை கொண்டிருந்தார். இதன்மூலம் பிறந்தநாளில் சிறந்த பவுலிங்கை பதிவுசெய்த வீரராக மாறி வரலாறு படைத்தார் ரஷித்கான். 17 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர் பிலாண்டர் (4/12) வைத்திருந்த சாதனையை பின்னுக்குதள்ளியுள்ளார் ரஷித் கான்.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

5. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல்முறை வெற்றி:

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியிருக்கும் ஆப்கானிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல்முறையாக இதை செய்து சாதனை படைத்துள்ளது.

afg vs sa
”அது 7 சிக்சர்களாக இருந்திருக்க வேண்டும்..” - 17 ஆண்டுக்கு பின் பிராட் வெளிப்படுத்திய உண்மை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com