1 மணி நேரத்திற்குள் சாய்ந்த 5 விக்கெட்கள்.. சாட்டையை சுழற்றிய ஜடேஜா.. இந்தியாவிற்கு டார்கெட் 359..!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 3589 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஜடேஜா
ஜடேஜாpt web
Published on

டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடந்து ஆடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டம் நேர முடிவில் 16 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்த இந்திய அணிக்கு மிட்செல் சான்ட்னர் நெருக்கடி கொடுத்தார். இதனால் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்தியா அணி 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து தரப்பில் சான்ட்னர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

டாம் லேதம்
டாம் லேதம்pt web

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியில் கேப்டன் டாம் லேதம் அரைசதம் கடந்தார். ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 198 ரன்களுக்கு 5 விக்கெட்டைகளை இழந்திருந்தது.

ஜடேஜா
“மதுரையில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..” - பிரதீப் ஜான் கொடுத்த அப்டேட்

இந்நிலையில், இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியது. களத்தில் பிலிப்ஸும் ப்ளண்டலும் இருந்தனர். நிதானமாக இருவரும் ஆட்டத்தை நிதானமாக ஆட்டத்தை ஆடினாலும் ஜடேஜா பந்தில் ப்ளண்டல் போல்ட் ஆனார். இது தொடர்ச்சியான விக்கெட்களுக்கு தொடக்கமாக அமைந்தது. அடுத்த சில ஓவர்களுக்குள் ஜடேஜா சாண்ட்னரையும் வெளியேற்ற அஸ்வின் சௌதி விக்கெட்டை வீழ்த்தினார். அஜாஸ் படேலை மீண்டும் ஜடேஜா வெளியேற்ற, இறுதி விக்கெட்டான வில்லியம் ஓ ரூர்க் ரன் அவுட்டில் ஆட்டமிழந்தார்.

மூன்றாம் நாள் ஆட்டத்தின் முதல் ஒரு மணி நேரத்தில் இந்திய அணி நியூசிலாந்தின் 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளது. இன்று ஜடேஜா மட்டும் மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். 359 என்ற மிகப்பெரிய இலக்கு என்பதால் இந்திய அணியின் பேட்டர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

ஏனெனில் இந்திய அணி, தனது சொந்த மண்ணில் 300க்கும் அதிகமான ரன்களை இலக்காகக் கொண்டு 26 முறை ஆடி ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 14 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 9 முறை ஆட்டம் ட்ரா ஆகியுள்ளது. 359 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கியுள்ள இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியான ஆட்டத்தை ஆடிவருகின்றனர்.

ஜடேஜா
ஓசூர் | தீவன மூட்டைகள் சரிந்து விழுந்து இரண்டு வட மாநில குழந்தைகள் பரிதாப உயிரிழப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com