பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா: தொடரை வென்ற நியூசிலாந்து!

பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா: தொடரை வென்ற நியூசிலாந்து!
பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா: தொடரை வென்ற நியூசிலாந்து!
Published on

இரண்டாவது ஒருநாள் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது

ஆக்லாந்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து வீரர்கள் குப்தில் 79 ரன்களும், ராஸ் டெய்லர் 73 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் சாஹல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிருத்வி ஷா அதிரடியாக விளையாடினார், ஆனால் 24 ரன்களில் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான மயங்க் அகர்வால் 3 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் கோலி, கே.எல்.ராகுல் மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் நிதானமாக 52 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.

பின்னர் ஜடேஜாவும், தாக்கூரும் நிதானமாக விளையாட தொடங்கினர். 73 பந்துகளில் 55 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா ஆட்டமிழந்தார். அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 48.3 ஓவர்களில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து வென்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com