கிரிக்கெட்: 3 விக்கெட்டை இழந்து இந்தியா தடுமாற்றம்!

கிரிக்கெட்: 3 விக்கெட்டை இழந்து இந்தியா தடுமாற்றம்!
கிரிக்கெட்: 3 விக்கெட்டை இழந்து இந்தியா தடுமாற்றம்!
Published on

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. விராத் கோலியும் பாண்டேவும் டக்-அவுட் ஆயினர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸில் வென்ற இந்திய கேப்டன் விராத் கோலி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதன்படி ஓபனிங் பேட்ஸ்மேன்களாக, ரோகித் சர்மாவும் ரஹானேவும் களமிறங்கினார். ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் கவுல்டர் நைலின் துல்லியமான பந்துவீச்சுக்கு 5 ரன்களில் பலியானார் ரஹானே. அடுத்த வந்த கேப்டன் விராத் கோலி, மணீஷ் பாண்டே ஆகியோரையும் அவரே அடுத்தடுத்து டக் ஆவுட் ஆக்கினார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். கேதர் ஜாதவும் ரோகித் சர்மாவும் இப்போது ஆடிவருகின்றனர். இந்திய அணி, 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்திருந்தது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com