உலகக்கோப்பை கால்பந்து: தகுதி பெற்றது கோஸ்டாரிகா அணி

உலகக்கோப்பை கால்பந்து: தகுதி பெற்றது கோஸ்டாரிகா அணி

உலகக்கோப்பை கால்பந்து: தகுதி பெற்றது கோஸ்டாரிகா அணி
Published on

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு கோஸ்டாரிகா அணி தகுதிபெற்றுள்ளது.

உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில் ஹோண்டுராஸ் அணியுடனான போட்டியில் ஒன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிக்கா அணி சமன் செய்தது. இதனையடுத்து, வடக்கு மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளுக்கான பிரிவில் மெக்சிகோ அணிக்கு அடுத்தபடியாக கோஸ்டாரிகா அணி உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. 4 போட்டிகள் இன்னும் எஞ்சியுள்ள நிலையிலேயே கோஸ்டாரிக்கா அணி உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது.

மற்றொரு தகுதிச்சுற்றில் பெலரஸ் அணிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது. பெலரஸ் நாட்டின் போரிசவ் நகரில் நடைபெற்ற போட்டியில் மூன்றுக்கு ஒன்று என்ற கோல்கள் கணக்கில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து உலகக்கோப்பைக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பில் நெதர்லாந்து அணி நூலிழையில் நீடிக்கிறது. ஏ பிரிவில் 16 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ள நெதர்லாந்து அணி, 19 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ள ஸ்வீடன் அணியை கடைசி லீக் ஆட்டத்தில் எதிர்கொள்கிறது.

பல்கேரிய அணிக்கு எதிரான தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஃபிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. பல்கேரியாவின் சோஃபியா நகரில் நடைபெற்ற போட்டியில், ஃபிரான்ஸ் அணி ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வென்றது. ஆட்டத்தின் 3-வது நிமிடத்திலேயே பிளேஸ் அடித்த கோல், பிரான்ஸ் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தது. இதனையடுத்து ஐரோப்பிய அணிகளுக்கான ஏ பிரிவில் 20 புள்ளிகளுடன் ஃபிரான்ஸ் அணி முதலிடத்திற்கு முன்னேறியது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com