கொரோனா அச்சம்: ஐபிஎல் டிக்கெட் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு..!

கொரோனா அச்சம்: ஐபிஎல் டிக்கெட் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு..!
கொரோனா அச்சம்: ஐபிஎல் டிக்கெட் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு..!
Published on

மகாராஷ்டிர மாநிலத்தில் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையை தற்காலிகமாக அதன் மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

13 ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இம்மாதம் 29 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி மும்பை நகரின் வான்கடே மைதானத்தில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெறுகிறது. தற்சமயம் மும்பையில் உலக சாலைப் பாதுகாப்பு கிரிக்கெட் தொடர் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, தென் ஆப்பிரிக்கா அணிகளின் ஓய்வுப் பெற்ற கிரிக்கெட் வீரர்களிடையே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. ஆனால், ஆளும் சிவசேனா அரசு இந்த டிக்கெட் விற்பனையை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி இன்று தொடங்கிய ஐபிஎல் டிக்கெட் விற்பனை உடனடியாக நிறுத்தப்பட்டது. மகாராஷ்டிரா போலவே கர்நாடக அரசும் மத்திய அரசிடம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக போட்டியை பெங்களூரில் நடத்தும் சூழல் இருக்கிறதா ? என்று ஆலோசனையை கேட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக மாநிலத்தின் சுதாகாரத்துறை அமைச்சர் கே.சுதாகர், “பெங்களூரில் நடைபெறும் போட்டிகள் குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். எங்களின் பக்கத்து மாநிலமான மகாராஷ்டிரா ஏற்கெனவே ஐபிஎல் போட்டிகள் தொடர்பாக ஓர் முடிவினை எடுத்துள்ளது. எனவே, பெங்களூரில் போட்டிகள் நடத்துவது குறித்து மத்திய அரசிடம் ஆலோசனை கேட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

ஆனால், இதுகுறித்து ஏற்கெனவே கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, “திட்டமிட்டப்படி ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் கொரோனாவால் எந்த பாதிப்பும் ஏற்படாது. மேலும் கொரோனா வைரஸ் பரவாதவாறு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com