இறுதிச்சுற்று போட்டிகளில் தொடர் தோல்வி... மோசமான வரலாற்றை திருத்தி எழுதுவாரா மெஸ்ஸி?

இறுதிச்சுற்று போட்டிகளில் தொடர் தோல்வி... மோசமான வரலாற்றை திருத்தி எழுதுவாரா மெஸ்ஸி?
இறுதிச்சுற்று போட்டிகளில் தொடர் தோல்வி... மோசமான வரலாற்றை திருத்தி எழுதுவாரா மெஸ்ஸி?
Published on

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் பிரேசிலை எதிர்த்து, முன்னாள் சாம்பியன் அர்ஜெண்டினா மோதுகிறது.

இன்று நடைபெற்ற போட்டியில் பெருவை வீழ்த்தி 3-வது இடம் பிடித்ததன் மூலமாக கொலம்பியா, பிரேசிலில் நடைபெற்று வரும் கோபா அமரிக்கா கால்பந்து தொடரின் இறுதிக்கட்டத்தை எட்டியது. இந்த இறுதிப்போட்டி, ரியோ டி ஜெனிரோவில் இந்திய நேரப்படி வரும் திங்கள்கிழமை (ஜூலை 12) காலை 5.30 மணிக்கு நடைபெறும் எனக்கூறப்பட்டுள்ளது.

இதுவரை பெரிய வெற்றியை ருசிக்காத கேப்டன் மெஸ்ஸி இந்தப் போட்டியில் எப்படி தன்னை முன்னிறுத்தப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. கால்பந்து உலகில் ஜாம்பாவான்களான மெஸ்ஸியும், நெய்மரும் இடம்பெற்றுள்ள அணிகள் நேருக்கு நேர் மோதுவதால், கால்பந்து ரசிகர்களிடையே இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்பட்டுள்ளது.

உலகின் சிறந்த கால்பந்து வீரர் என்ற விருதை 6 முறை வென்ற அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸிக்கு, இதுவரை எவ்வித கோப்பையும் வசப்படவில்லை. இறுதிசுற்று போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்தவர் என்ற மோசமான வரலாற்றை திருத்தி எழுதும் முயற்சியில் உள்ளார் மெஸ்ஸி.

இதனிடையே, இன்று நடைபெற்ற 3-வது மற்றும் நான்காவது இடத்துக்கான போட்டியில், கொலம்பியா அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தியது. கொலம்பியா வீரர் லூயிஸ் டயஸ் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கோல் அடித்து, தனது அணிக்கு வெற்றி தேடி தந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com