ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் 21 ஆண்டுகளுக்குப் பிறகு லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா அணியை விட்டு வெளியேறினார்.
ஆறு முறை பலோன் டி'ஓர் வென்ற லியோனல் மெஸ்ஸி, பார்சிலோனா அணியை விட்டு வெளியேறினார் என்று பார்சிலோனா கிளப் இன்று அறிவித்தது. 'பார்சிலோனா மற்றும் மெஸ்ஸி இடையே ஒரு உடன்பாட்டை எட்டி இரு தரப்பினரும் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற தெளிவான எண்ணம் இருந்தாலும், நிதி மற்றும் கட்டமைப்பு தடைகள்; காரணமாக ஒப்பந்தம் கையெடுத்தாக வில்லை என்று பார்சிலோனா அணி நிர்வாகம் கூறியுள்ளது.

LATEST NEWS | Leo #Messi will not continue with FC Barcelona
— FC Barcelona (@FCBarcelona) August 5, 2021

கடந்த 2000 ஆம் ஆண்டு இளம் வீரராக பார்சிலோனா அணியில் இணைந்த லியோனல் மெஸ்ஸி 21 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணியில் இருந்து வெளியேறியுள்ளார்.

Thank you, Leo. pic.twitter.com/cdS9xWe8Me
— FC Barcelona (@FCBarcelona) August 5, 2021

லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக இதுவரை 672 கோல்கள் அடித்து உள்ளார். தனிப்பட்ட கிளப் அணிக்காக பீலே அடித்த 643 கோல் என்ற சாதனையை முறியடித்து மெஸ்ஸி புதிய சாதனை படைத்தார். அந்த அணிக்காக 34 டிராபிகளையும் பெற்றுத் தந்துள்ளார்.