உலகக் கோப்பையை வெல்ல இங்கிலாந்து தகுதியான அணி என்று நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்தார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதிய இந்தப் போட்டியில், யாரும் எதிர்பாராத வகையில் பல திருப்பங்களும் விறுவிறுப்பும் மிகுந்திருந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து, 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்தது. டாம் லாதம் 47 ரன்னும் ஹென்றி நிக்கோலஸ் 55 ரன்னும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியும் 241 ரன் எடுத்ததால் ஆட்டம் டை ஆனது. பென் ஸ்டோக்ஸ் 84 ரன்னும் பட்லர் 59 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இந்த ஓவரும் டை ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அதிக பவுண்டரி அடித்த அணி என்ற கணக்கின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், தங்களது 44 ஆண்டுகால கனவைப் பூர்த்தி செய்துள்ளது இங்கிலாந்து அணி.
போட்டிக்குப் பின், தொடர் நாயகன் விருது பெற்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறும்போது, ‘’ போட்டி கடும் சவா லாக இருந்தது. இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். உலகக் கோப்பையை வெல்ல அந்த அணி தகுதியானது. இந்தப் பிட்ச் நாங்கள் எதிர்பார்த்ததை விட வித்தியாசமாக இருந்தது. இதில் 300 ரன்களுக்கு மேல் அடிக்கலாம் என்று பேசிக்கொண்டிருந் தோம். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. இன்னும் 10-20 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தால் சிறப்பானதாக இருந்திருக் கும். எங்கள் வீரர்களும் சிறப்பாக ஆடினார்கள்.
கடைசிவரை போராடினார்கள். அவர்களுக்கு நன்றி. கடைசிக் கட்டத்தில் ஸ்டம்பை நோக்கி எறியப்பட்ட பந்து, பென் ஸ்டோக் ஸ் பேட்டில் பட்டு பவுண்டரி சென்றது அவமானகரமானது. (இதுதான் ஆட்டத்தை போக்கை மாற்றியது) விளையாட்டில் இது வும் ஓர் அங்கம் என்றாலும் இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்கக் கூடாது என்று நினைக்கிறேன்’’ என்றார்.