”இப்படி பண்ணா எப்படி பதக்கம் கிடைக்கும்?” - கொந்தளிக்கும் வீரர்கள்; ஆசிய குத்துச்சண்டையில் குளறுபடி?

ஆசிய குத்துச்சண்டை தகுதிப் போட்டிக்கு முறைகேடாக தகுதி இல்லாத நபர்களை தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் அனுப்பி உள்ளதாகவும், அதற்கு முறையான நடவடிக்கை வேண்டும் எனவும் குத்துச்சண்டை பயிற்சியாளர்கள் மற்றும் குத்துச்சண்டை வீரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குத்துச்சண்டை பயிற்சியாளர்கள்
குத்துச்சண்டை பயிற்சியாளர்கள்PT
Published on

ஆசிய குத்துச்சண்டை போட்டிக்கான தகுதிப் போட்டிக்கு முறைகேடாக தகுதியில்லாத நபர்களை அனுப்பி உள்ளது தொடர்பாக சென்னை நேரு விளையாட்டு அரங்கில் உள்ள குத்துச்சண்டை சங்க அலுவலகம் முன்பு திரண்ட குத்துச்சண்டை பயிற்சியாளர்கள் மற்றும் குத்துச்சண்டை வீரர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

தகுதியில்லாத வீரர்களை அனுப்பி வைத்த குத்துச்சண்டை சங்கம்!

செய்தியாளர்களை சந்தித்த குத்துச்சண்டை பயிற்சியாளர்கள் தேவராஜ் கார்த்திக் ஆகியோர் பேசுகையில்,

”கஜகஸ்தானில் ஆசிய குத்து சண்டை போட்டி விரைவில் நடைபெற உள்ளது. இந்த ஆசிய குத்துச்சண்டை போட்டிக்கான தகுதிப்போட்டி ஹரியானா மாநிலத்தில் நடைபெற உள்ளது.

குத்துச்சண்டை பயிற்சியாளர்கள்
குத்துச்சண்டை பயிற்சியாளர்கள்PT

இந்த தகுதி போட்டியில் பங்கேற்க தமிழகத்தின் சார்பில் நான்கு பிரிவுகளின் கீழ் குத்துச்சண்டை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் முறையாக தகுதி பெறாத குத்துச்சண்டை வீரர்கள். முறைகேடான வகையில் தகுதியில்லாத வீரர்களின் பெயர்கள் ஆசிய குத்துச்சண்டை தகுதிப்போட்டிக்கு தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கத்தினர் தேர்வுசெய்து அனுப்பியுள்ளனர்.

”தங்கம் வென்ற வீரர்களை அனுப்பாமல் முறைகேடு நடந்தது வேதனையானது!”

முறையாக பார்த்தால் தமிழ்நாடு ஜூனியர் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர்கள் அல்லது வெள்ளி பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர்கள் தான் இந்த ஆசிய குத்துச்சண்டை தகுதி போட்டிக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் மாநில போட்டியில் தங்கப்பதக்கம், வெள்ளி பதக்கம், வெண்கல பதக்கம் வென்ற வீரர்களின் பெயர்கள் ஆசிய குத்துச்சண்டை தகுதிப்பட்டிக்கு அனுப்பி வைக்காமல் தடுத்துள்ளனர். தகுதியான வீரர்கள் ஆசிய போட்டிக்கு செல்வது தடைபட்டுள்ளது.

பல ஆண்டுகள் கடினப்பட்டு உழைத்து முன்னேறிய வீரர்களுக்கு வாய்ப்பு தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ள வீரர்களுடன் தோல்வி அடைந்து பதக்கம் வெல்லாத வீரர்கள் ஆசிய தகுதிப் போட்டிக்கு அனுப்பி வைத்தது வேதனையானது. ஆகவே தமிழ்நாடு அரசும் விளையாட்டுத்துறை அமைச்சரும் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி முறைகேட்டில் ஈடுபட்ட தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கத்தின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியான வீரர்கள் ஆசிய தகுதி போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று பேட்டியளித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com