காமன்வெல்த் 2026|பேட்மிண்டன், மல்யுத்தம் உள்ளிட்ட 9 விளையாட்டுகள் நீக்கம்! இந்தியாவுக்குப் பின்னடைவு

2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் எண்ணிக்கையில் கணிசமான அளவு குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவின் பதக்கவாய்ப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
commonwealth games
commonwealth gamesx page
Published on

2026 காமன்வெல்த் போட்டிகள்

விளையாட்டு உலகில் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படுவது ஒலிம்பிக் போட்டி ஆகும். இதற்கு அடுத்த விழாவாகப் பார்க்கப்படுவது காமன்வெல்த் போட்டி ஆகும். காமன்வெல்த் போட்டியின் வரலாறு என்பது நூற்றாண்டைக் கடந்தது ஆகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று இந்தப் போட்டி, 2026ஆம் ஆண்டு, ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மிகப் பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த போட்டியில், 74 காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த சுமார் 3000 தடகள வீரர்கள் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

9 விளையாட்டுகள் நீக்கம்

அந்த வகையில், 23-வது காமன்வெல்த் விளையாட்டான இதில் இடம்பெறும் போட்டிகள் குறித்து காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு இன்று (அக்.22) அறிவித்தது. அதன்படி இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி, மல்யுத்தம், பேட்மிண்டன், கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ், டிரையத்லான், பீச் வாலிபால் மற்றும் ரக்பி செவன்ஸ் ஆகிய போட்டிகள் நீக்கப்பட்டுள்ளன. செலவைக் கட்டுப்படுத்தும் விதமாக இப்போட்டிகள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த முறை, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தடகளம் மற்றும் பாரா தடகளம், குத்துச்சண்டை, bowls and para, நீச்சல் மற்றும் பாரா-நீச்சல், கலை ஜிம்னாஸ்டிக்ஸ், டிராக் சைக்கிள் மற்றும் பாரா-டிராக் சைக்கிள் ஓட்டுதல், நெட்பால், பளுதூக்குதல் மற்றும் பாரா-பவர் லிஃப்டிங் ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளது. அதைப்போல, ஜூடோ, மற்றும் 3-3 பேர் இணைந்து விளையாடும் கூடைப்பந்து மற்றும் 3-3 சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டிகளும் நடைபெற உள்ளது.

இதையும் படிக்க: ரூ.26 லட்சம் மதிப்புள்ள பை| ஹமாஸ் தலைவர் யாஹியாவின் இறுதிநிமிட காட்சிகள்.. வீடியோ வெளியிட்ட இஸ்ரேல்!

commonwealth games
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற தமிழக பெண் எஸ்.ஐ.. கிராமமே கொண்டாட்டம்..!

இந்தியாவுக்கு பின்னடைவு ஏன்?

மல்யுத்தம், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகளில் இந்தியா கடந்த முறை பதக்கங்களை வேட்டையாடிய நிலையில், இந்த முறை அந்த போட்டிகள் இல்லாதது இந்தியாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் செயல்திறன் வரலாற்றுரீதியாக வலுவாக உள்ளது, பெரும்பாலும் இப்போது நீக்கப்பட்ட விளையாட்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. ஹாக்கி, பேட்மிண்டன் மற்றும் மல்யுத்தம் ஆகியவற்றில் நாடு கணிசமான எண்ணிக்கையிலான பதக்கங்களை வென்றுள்ளது. குறிப்பாக மல்யுத்தம், துப்பாக்கிச் சுடுதல் இந்தியா வேட்டையாடிய பதக்கங்கள் அதிகம். இவை அனைத்தும் வரவிருக்கும் பதிப்பில் இடம்பெறாது.

இதனால் இந்தியாவின் பதக்க வாய்ப்புகள் குறையும் எனக் கூறப்படுகிறது. 2022 காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கம் பெற்று பதக்கப் பட்டியலில் 4வது இடத்தை பிடித்தது. இதற்காக இந்தியாவிலிருந்து 210 விளையாட்டு வீரர் வீராங்கனைகள் அனுப்பப்பட்டனர். 2022ஆம் ஆண்டு இந்தியா வென்ற 61 பதக்கங்களில் 30 பதக்கங்கள் [(கிரிக்கெட் (1), ஹாக்கி (2), ஸ்குவாஷ் (2), டேபிள் டென்னிஸ் (7), மல்யுத்தம் (6), பேட்மிண்டன் (12)] 2026ஆம் ஆண்டு நீக்கப்பட்ட விளையாட்டுகளில் இருந்து கிடைக்கப்பட்டவை ஆகும். தற்போது இந்த நீக்கப்பட்ட விளையாட்டுகள் காரணமாக, 2026 காமன்வெல்த்தில் கலந்துகொள்ளப்போகும் இந்திய வீரர், வீராங்கனைகளின் எண்ணிக்கை குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் 98 பேர் மட்டும் பங்கேற்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இது, 2022ஆம் ஆண்டு பங்கேற்ற மொத்தக் குழுவில் 47% ஆகும்.

இதையும் படிக்க: 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்| வங்கத்தைச் சுருட்டிய SA.. அதிவேகமாக 300 விக்கெட்டை சாய்த்த ரபாடா!

commonwealth games
காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கம் - 16 வயது தமிழக வீரர் அசத்தல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com