21வது காமல்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் இன்று முதல் நடைபெறுகிறது.
காமல்வெல்த் போட்டிகளுக்காக விளையாட்டு கிராமமாக உருவாக்கப்பட்டு கோல்டு கோஸ்ட், பிரம்மிக்க வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பங்கேற்கும் ஆயிரக்கணக்கான வீரர்கள் தங்குவதற்கு 1.257 குடியிருப்புகள் மற்றும் 24 மணி நேர மருத்துவமனை உள்ளன. 29 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு கிராமத்தில், உடற்பயிற்சிக் கூடம், சலூன் உள்ளிட்டவைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் 20 ஆயிரம் பேர் அமர்ந்து உண்ணும் அளவிற்கு மிகப்பெரும் உணவுக்கூடம் உள்ளது. இங்கு உலகின் அனைத்து வகை உணவுகள் சமைக்கப்படுகின்றன. இதுதவிர விளையாட்டு வீரர்களில் ஒருவருக்கு தலா 16 ஆணுறைகள் என மொத்தம் 1 லட்சம் ஆணுறைகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் வீரர்களின் படுக்கைகளில் தலையணை உறைகள் மற்றும் விரிப்புகளை தினந்தோறும் மாற்றவும் துப்புரவு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.