மெஸ்ஸியை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய சீன போலீசார்! ரசிகர்கள் அதிர்ச்சி! நடந்தது என்ன?

சர்வதேச நட்பு ரீதியான கால்பந்து போட்டியில் விளையாடுவதற்காக சீனாவின் பெய்ஜிங் விமான நிலையத்திற்கு வந்த லியோனல் மெஸ்ஸியை சீன போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Messi Detained in China Airport
Messi Detained in China AirportTwitter
Published on

அர்ஜென்டினா அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்ஸி, ஜூன் 10ஆம் தேதியன்று சீன தலைநகரான பெய்ஜிங் விமான நிலையத்திற்கு வந்தபோது தடுத்து நிறுத்தப்பட்டார்.

30 நிமிடங்கள் விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்ட மெஸ்ஸி!

சீனாவின் தலைநகரில் உள்ள ஒர்க்கர்ஸ் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியா மற்றும் அர்ஜெண்டினா அணிகள் மோதும் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாட சனிக்கிழமை அன்று சீனா வந்தார் மெஸ்ஸி. பெய்ஜிங் விமான நிலையத்தில் தரையிறங்கிய அவரை சோதனை பணியின் போது சீன காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மெஸ்ஸியிடம் சீன விசா இல்லாதநிலையில், அவர் அர்ஜென்டினா பாஸ்போர்ட்டை பயன்படுத்தாமல் ஸ்பெயின் பாஸ்போர்ட்டுடன் பயணித்ததால் குழப்பம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெஸ்ஸியின் விசா வருவதற்கு தாமதமாகியதால், சுமார் 30 நிமிடங்கள் மெஸ்ஸியை தடுத்து நிறுத்தியது சீன காவல்துறை.

மெஸ்ஸி சீன காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த வீடியோவில், “கையில் பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு சக ஊழியர்களுடன் பேசிக்கொண்டிருந்த அர்ஜென்டினா தேசிய அணி கேப்டனை, பல போலீஸ் அதிகாரிகள் சூழ்ந்து தடுத்து நிறுத்தும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாக பரவியது. உள்ளூர் ஊடகங்களின்படி, மெஸ்ஸி தனது அர்ஜென்டினா பாஸ்போர்ட்டை விடுத்து ஸ்பானிய பாஸ்போர்ட்டை பயன்படுத்தியதால் அவர் சிக்கலை எதிர்கொண்டார்” என்று தெரிகிறது.

லியோனல் மெஸ்ஸி தனது அர்ஜென்டினா பாஸ்போர்ட்டை கொண்டுவரத் தவறியதால் விமான நிலையப் பாதுகாப்புப் பணியாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும் நெருக்கடியான ஒரு நிலைக்கு தள்ளப்பட்டது. சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு அவருக்கு நுழைவு விசா வழங்கப்பட்ட நிலையில், மெஸ்ஸி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றார். அர்ஜென்டினா அணி, ஜூன் 15 வியாழன் அன்று ஆஸ்திரேலிய அணியை நட்பு ஆட்டத்தில் எதிர்கொள்கிறது.

PSG-ல் இருந்து வெளியேறி இண்டர் மியாமிக்கு செல்லும் மெஸ்ஸி!

ஜூன் 19ஆம் தேதியன்று இந்தோனேசியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் போட்டியில், அர்ஜெண்டினா அணியை வழிநடத்தவிருக்கும் லியோனல் மெஸ்ஸி அதன்பிறகு இண்டர் மியாமி கிளப்பில் சேருகிறார்.

Messi - PSG
Messi - PSGtwitter

மெஸ்ஸி விளையாடிய சமீபத்திய போட்டியில், PSG ரசிகர்களால் கேலி செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு முன்னாள் வீரரும், மெஸ்ஸியின் நண்பருமான செர்ஜியோ அகுரோ மெஸ்ஸியின் பாதுகாப்பிற்கு விரைந்தார். "பிஎஸ்ஜியில் இருந்து வெளியேறுவதற்கு லியோவிற்கு இது பொருத்தமான நேரம்" என்று கூறினார். இந்த சம்பவத்திற்கு பிறகு PSG மெஸ்ஸியை கிளப்பிலிருந்து வெளியேற்றுவதாக அறிவித்தது. PSG-ன் இந்த முடிவு பல விமர்சனங்களை சந்தித்த நிலையில், மெஸ்ஸி இண்டர் மியாமி கிளப்பில் சேரவிருப்பதாக தெரிவித்தார்.

Messi in Inter Miami
Messi in Inter MiamiTwitter

இந்நிலையில், மெஸ்ஸிக்காக PSG கிளப்பை சமூக ஊடகங்களில் பின்தொடர்ந்த ரசிகர்கள், தற்போது அன்-ஃபால்லோ செய்து வருகின்றனர். ஜூன் 3 முதல் இதுவரை PSG கிளப்பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 1.6 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்வதை நிறுத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. மேலும் இண்டர் மியாமி கிளப்பை தேடும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் விவரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com