சி.எஸ்.கே அணிக்கு பாராட்டு விழா - ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் தோனி பங்கேற்பு

சி.எஸ்.கே அணிக்கு பாராட்டு விழா - ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் தோனி பங்கேற்பு
சி.எஸ்.கே அணிக்கு பாராட்டு விழா - ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் தோனி பங்கேற்பு
Published on

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. 

சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் 2021 ம் ஆண்டு நடைபெற்ற 14வது ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டுவிழா நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி வருகை புரிந்துள்ளார்.

முதல்வருடன் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கலாநிதி வீராசாமி எம்பி ஆகியோர் வருகை புரிந்துள்ளனர். மேலும், அணியின் முதன்மை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், இந்திய சிமெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் ஆகியோரும் வருகை தந்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com