‘மிக இளம் வயது செஸ் வீரர்’ என்ற வரலாற்று சாதனையை படைத்து அசத்திய 3 வயது சிறுவன்!

தனது 3 வயதிலேயே ’மிக இளம் வயது செஸ் வீரர்’ என்ற சாதனையின் மூலம், வரலாற்றில் இடம்பிடித்து அசத்தியுள்ளார் கொல்கத்தாவை சேர்ந்த அனிஷ் என்ற 3 வயது சிறுவன். யார் இவர்? விரிவாக அறியலாம்...
அனிஷ்
அனிஷ் முகநூல்
Published on

தனது 3 வயதிலேயே ’மிக இளம் வயது செஸ் வீரர்’ என்ற சாதனையின் மூலம், வரலாற்றில் இடம்பிடித்து அசத்தியுள்ளார் கொல்கத்தாவை சேர்ந்த அனிஷ் என்ற 3 வயது சிறுவன். யார் இவர்? விரிவாக அறியலாம்...

பெரும்பாலான குழந்தைகளின் உலகத்தில் சோட்டா பீம் போன்ற கார்ட்டூன்களும், பொம்மைகளுடனான உரையாடல்களும், விளையாட்டு சாமான்களில் கூட்டஞ்சோறும்தான் முக்கிய அங்கம் வகிக்கும். ஆனால், கொல்கத்தாவை சேர்ந்த சிறுவன் ஒருவனின் உலகத்தில், கருப்பு வெள்ளை சதுரங்க காய்களின் அணிவகுப்புதான் இருக்கிறது என்றால் ஆச்சரியம்தானே?

பிறந்து வெறும் 3 வயது 9 மாதங்கள் 9 நாட்கள்தான்.. ஆனால், இடம்பிடித்திருப்பதோ வரலாற்று புத்தகத்தில்...!

அனிஷ்
அக்டோபர் மாதத்தில் மட்டும் 10 ஆயிரம் மின்சார கார்கள் விற்பனை.. வாஹன் தளத்தில் வெளியான தரவுகள்

யார் இந்த சிறுவன்?

இந்தியாவின் வடக்கு கொல்கத்தாவைச் சேர்ந்த சிறுவன் அனிஷ் சர்கார். இவர் ஜனவர் 26, 2021 ஆம் ஆண்டு பிறந்தவர். தற்போது இவருக்கு 3 வயது 9 மாதங்கள் 9 நாட்கள் ஆகிறது. இவர், கடந்த அக்டோபரில் 9 வயதுக்குட்பட்ட மேற்குவங்க செஸ் ஓபன் போட்டியில் பங்கேற்றார்.

மொத்தம் 8 புள்ளிகளுக்கு 5.5 புள்ளிகளை எடுத்து, ஒட்டுமொத்தமாக 24 ஆவது இடத்தை பிடித்து வியக்க வைத்திருக்கிறார் இவர். அதுமட்டுமல்ல.. ஆரஷ், அஹிலன் என்ற இரண்டு தரவரிசை வீரர்களை வென்று அசத்தி இருக்கிறார்.

இதுத்தவிர, பெங்கால் ரேபிட் ரேட்டிங் ஓபனில் நடந்த கண்காட்சிப்போட்டியில் இந்தியாவின் ’நம்பர் 1’ மற்றும் உலகின் ’நம்பர் 4 கிராண்ட்மாஸ்டர்’ அர்ஜூன் எரிகைசிக்கு எதிராவும் விளையாடி மிரட்டியுள்ளார். தொடர்ந்து, ஒரு வாரம் கழித்து 13 வயதுக்குட்பட்ட மேற்கு வங்க ஓபனில் தனது திறமைகளை மீண்டும் களத்தில் இறக்கி, அனுபவம் வாய்ந்த வீரர்களுடனும் களம் கண்டுள்ளார். மேலும், FIDE மதிப்பீட்டில் 1555 இன் ஆரம்ப மதிப்பீட்டைப் பெற்றுள்ளார்.

அனிஷ்
ஷேக் ஹசீனாவுக்கு எதன் அடிப்படையில் மத்திய அரசு அடைக்கலம் கொடுத்தது?-கேள்வி எழுப்பிய ஹேமந்த் சோரன்!

இதனையடுத்து, அனிஷ் சர்வதேச தரவரிசை (FIDE) பட்டியலில் இடம் பிடித்து 'மிக இளம் வயது செஸ் வீரர்’ என்ற சாதனையை படைத்துள்ளார். இதன்மூலம், முன்னதாக 5 வயதில் FIDE வீரராக சாதனைப்படைத்த தேஜஸ் திவாரியின் சாதனையை முறியடுத்துள்ளார்.

பயிற்சியாளர் திபியேந்து பருவா இவர் குறித்து தெரிவிக்கையில், “இவர் எனக்கு மித்ரபா குஹாவை (20 வயதில் GM ஆனவர்) நினைவூட்டுகிறார். அனிஷுக்கு நிச்சயமாக இதற்கான ஆற்றல் உள்ளது. மேலும் மேலும் அவர் செல்ல வேண்டிய தூரம் நீளமானது” என்று தெரிவித்துள்ளார்.

மேசையின் மீது வைக்கப்பட்டிருக்கும் செஸ் போர்டை பார்ப்பதற்கே, தான் அமர்ந்திருக்கும் நாற்காலியின் மீது கால்வைத்து எட்டிபார்த்து விளையாடும் அனிஷ்ஷின் சுட்டுத்தனமான காட்சிகள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. அந்த வீடியோக்களை காணும் பலரும், ‘குழந்தை விளையாட்டில் கெட்டிகாரன்தான்’ என்று பாராட்டியே வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com