சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள பெரும்பாலான வீரர்கள் 30 வயதைத் தாண்டியவர்கள். இதனால் ’சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணியை, ’சென்னை சீனியர் கிங்ஸ்’ என்று சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்யத் தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் சிஎஸ்கே அணியின் சிஇஓ கே.எஸ்.விஸ்வநாதன் கூறும்போது, ‘இப்போது இருக்கிற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள், சிறப்பானவர்கள். அவர்களின் தகுதி, ஐபிஎல் அனுபவம், திறமையை கணக்கில் கொண்டே எடுக்கப்பட்டிருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளர் உனட்கட்-ஐ ஏலத்தில் எடுக்க முடியாதது பற்றி கேட்கிறார்கள். ஏலம் என்று வரும்போது லாப, நஷ்டம் கண்டிப்பாக இருக்கும். எங்கள் அணியில் சிறந்த இடது கை வேகப்பந்துவீச்சாளர் கனிஷ்க் சேத் இருக்கிறார். தாகூர், தீபக் சாஹர் ஆகிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுடன் மார்க் வுட், லுங்கி நிகிடி ஆகிய வெளிநாட்டு வீரர்களும் இருக்கிறர்கள்’ என்றார்.
பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் கூறும்போது, ‘சென்னையின் பலம் சுழற்பந்துவீச்சுதான். அதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். பிராவோ, வாட்சன் போன்ற ஆல்ரவுண்டர்களும் இருக்கிறார்கள். இவர்கள் சிறப்பான பங்களிப்பை தருவார்கள்’ என்றார்.