சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பதக்கம் வெல்லும் கனவை முடித்து வைத்துள்ளார் கனடா வீராங்கனை ஜீனி பவுச்சார்ட்.
சர்வதேச மகளிர் சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்று போட்டிகள் நேற்று நடைபெற்றன. ஏற்கனவே முதல் சுற்றில் இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனை அங்கித்தா ரெய்னா தொடரை விட்டு வெளியேறி இருந்தாலும், முதல் சுற்றில் இந்தியாவின் இரண்டாம் நிலை வீராங்கனையாக உள்ள கர்மன் கவுர் தண்டி சிறப்பாக விளையாடியது மூலம் ஒட்டுமொத்த டென்னிஸ் ரசிகர்களும் பார்வையும் அவர் மீது விழுந்திருந்தது.
இந்நிலையில் கர்மன் கவுர் பங்கேற்று ஆடிய நேற்றைய போட்டியில், கன்னட வீராங்கனை ஜீனி பவுச்சார்ட் முதல் செட்டில் துவக்கம் முதலே சிறப்பாக விளையாடி முதல் செட்டை 6-2 என கைப்பற்றினார். இருப்பினும் ரசிகர்களின் ஆராவாரத்தோடு இரண்டாவது செட்டில் துவக்கம் முதல் அதிரடி காட்டிய கர்மன் கவுர் தண்டி, 180 கிலோ மீட்டர் வேகத்தில் தன்னுடைய சர்விஸ் மூலம் 5-2 என முன்னிலை வகித்தார்.
இந்நிலையில் கர்மன் கவுர் இறுதி புள்ளி எடுக்க முடியாமல் தடுமாற, 3 புள்ளிகள் பின் தங்கி இருந்த உலகின் 5ஆம் நிலை வீராங்கனை ஜீனி பவுச்சார்ட் 7-6 என்ற புள்ளி கணக்கில் இரண்டு செட்களையும் வென்று போட்டியில் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகளின் பயணம் நிறைவடைந்து இருக்கிறது.
மற்றொரு போட்டியில் தரவரிசையில் 130வது இடத்தில் உள்ள செக்குடியரசின் லிண்டா ஃப்ருவிர்டோவா (linda fruhvirtova), தரவரிசையில் 95வது இடத்தில் உள்ள ஸ்வீடனின் ரெபெக்கா பீட்டர்சனை (rebecca peterson) எதிர்கொண்டார். இதில், தொடக்கம் முதல் தனது சுறுசுறுப்பான ஆட்டத்தை எதிர்கொண்ட லிண்டா, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.