ஐபிஎல் இறுதிப் போட்டி ஹைதராபாத்திற்கு மாற்றம் - சென்னை ரசிகர்கள் ஏமாற்றம்

ஐபிஎல் இறுதிப் போட்டி ஹைதராபாத்திற்கு மாற்றம் - சென்னை ரசிகர்கள் ஏமாற்றம்
ஐபிஎல் இறுதிப் போட்டி ஹைதராபாத்திற்கு மாற்றம் - சென்னை ரசிகர்கள் ஏமாற்றம்
Published on

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி சென்னையிலிருந்து ஹைதராபாத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரும் கிரிக்கெட் திருவிழாவாக கருதப்படும் ஐபிஎல் போட்டியின் 12வது தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 56 லீக் போட்டிகள் நடைபெறுவதற்கான மைதானங்கள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு, அதன்படி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோன்று ப்ளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான மைதானங்களும் திட்டமிடப்பட்டிருந்தன. இதில் இறுதிப் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதனாத்தில் நடைபெறும் என கூறப்பட்டிருந்தது. இதனால் சென்னை ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். இந்நிலையில் சென்னையிலிருந்து இறுதிப்போட்டி ஹைதராபாத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஐ, ஜெ, கே என்ற மூன்று கேலரியில் பார்வையாளர்களை அமர்த்துவதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் ஆணையம் அனுமதி வழங்காததால் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் முதல் தகுதிப் போட்டி மே 7ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ப்ளே ஆஃப் போட்டி மற்றும் 2வது தகுதிப்போட்டி விசாகப்பட்டினத்தில் மே 8 மற்றும் மே 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இறுதிப்போட்டி மே 12ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ப்ளே ஆஃப் போட்டி மற்றும் 2வது தகுதிப்போட்டியை ஹைதராபாத்தில் நடத்த திட்டமிருந்ததாகவும், ஆனால் மே 6, 10 மற்றும் 14 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதால் காவல்துறை பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தான் அந்தப் போட்டிகளிலும் விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com