டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றில் இன்று மாலை 4.30 மணிக்கு பெர்த் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இங்கிலாந்து அணி புதிய கேப்டனான ஜாஸ் பட்லர் தலைமையில் களமிறங்குகிறது. ஜானி பேர்ஸ்டோ காயம் காரணமாக விலகியது சற்று பின்னடைவுதான். எனினும் பென் ஸ்டோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், ஃபில் சால்ட், ஜாஸ் பட்லர், மொயின் அலி என என அதிரடி வீரர்களுக்கு அணியில் பஞ்சமில்லை. பவுலிங்கில் மார்க் வுட், சேம் கரண், தைமால் மில்ஸ், ஆதில் ரஷீத் வலுவாக உள்ளனர். ரீசே டோப்லி கடைசி நேரத்தில் காயம் காரணமாக விலகி உள்ளது சற்று பின்னடைவுதான்.
சுழற்பந்து வீச்சு வலுவாக இருக்கும் ஆப்கானிஸ்தான் அணியில் பேட்டிங்கிலும் கூட மட்டையை சுழற்ற துணியக்கூடிய அணியாகவே உள்ளது. இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வாய்ப்பிருக்கிறது.
இதற்கு முன்பு டி20 போட்டிகளில் இவ்விரு அணிகளும் இரண்டு முறை சந்தித்து அதில் இரண்டிலும் இங்கிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது.
உத்தேச இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, சாம் குரான், கிறிஸ் வோக்ஸ் / டேவிட் வில்லி, கிறிஸ் ஜோர்டான்,அடில் ரஷித், மார்க் வூட்
உத்தேச ஆப்கானிஸ்தான் அணி: ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய், ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான், தர்விஷ் ரசூலி, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி (கேப்டன்), அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷீப் கான், ரசீப் கான், உல்-ஹக், ஃபசல்ஹக் ஃபரூக்கி
இதையும் படிக்கலாமே: இந்தியா-பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்குமா? - ஆட்டம் ரத்தானால் பலத்த நஷ்டம்