ஆஷஸ் டெஸ்ட்: மார்ஷ் வேகத்தில் இங்கிலாந்து அணி தடுமாற்றம்

ஆஷஸ் டெஸ்ட்: மார்ஷ் வேகத்தில் இங்கிலாந்து அணி தடுமாற்றம்

ஆஷஸ் டெஸ்ட்: மார்ஷ் வேகத்தில் இங்கிலாந்து அணி தடுமாற்றம்
Published on

ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் நேற்றைய ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் சேர்த்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி, 2-க்கு 1 என முன்னிலை பெற்றுள்ளது.  இந்த இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இங்கிலாந்து அணியிலி ருந்து ஜேசன் ராய் மற்றும் ஓவர்டான் ஆகியோர் நீக்கப்பட்டு சாம் கரன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டனர். மேலும், காயம் குணமடைந்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனும் அணிக்கு திரும்பினார். ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் நீக்கப்பட்டு மிட்சல் மார்ஷ் சேர்க்கப்பட்டார்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கி லாந்து அணி, ஆஸ்திரேலிய வீரர்களின்  சிறப்பான பந்துவீச்சில், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.  நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி, 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பர்ன்ஸ் 47 ரன்களும் கேப்டன் ரூட் 57 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஜாஸ் பட்லர் 64 ரன்களுடனும் லீச் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

ஆஸ்திரேலிய தரப்பில், மார்ஷ் 4 விக்கெட்டுகளையும் கம்மின்ஸ், ஹசல்வுட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 2 ஆம் நாள் ஆட்டம் இன்று நடக்கிறது

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com